வெள்ளி, 27 நவம்பர், 2009

எங்கள் குட்டி தேவதை



இந்த பாடல் கேட்கும் போது எங்கள் சுபிக்ஷா பாப்பாவின் நினைவு வரும்.
சுபிக்ஷா என் அக்காவின் குழந்தை
அவளுக்கு ஒன்றரை வயது இருக்கும் போது என் அக்கா அவளுக்கு இந்த பாடல் சொல்லி தந்தாள். அப்போது அவள் பட்ட பாடு இப்போது நினைத்தாலும் எங்களுக்கு சிரிப்பும், சந்தோசமும் தான் வருகிறது.

அக்கா: அம்மா இங்கே வா வா
பாப்பா: அம்மா தான் இங்க இருக்கீங்க. இன்னொரு அம்மாவை கூப்பிடணுமா?
அக்கா இந்த வரியிலே அதிர்ச்சி ஆகிட்டாள். பின் விளக்கம் சொல்லி கொடுத்து அடுத்த வரிக்கு வந்தாள்

அக்கா: ஆசை முத்தம் தா தா
பாப்பா: நிஜமாலும் முத்தம் கொடுத்தாள்

அக்கா: இலையில் சோறு போட்டு
பாப்பா: நிஜமாலும் போட போகிறார்கள் என்று நினைத்து எனக்கு சோறு வேண்டாம் வேண்டாம் ன்னு ஒரே சிணுங்கள்

அக்கா: ஈ யை தூர ஓட்டு
பாப்பா: எங்க மா ஈ ? இங்கே காட்டு. என் கண்ணுக்கு தெரியலையே...

ஒவ்வொரு முறையும் விளக்கம் சொல்லி, சொல்லிகொடுத்த அக்காவிற்கு அதற்கு மேல் பொறுமை இல்லை. அன்றைய பாடம் அத்தோடு முடிந்தது. எங்கள் குட்டி தேவதை எப்போதும் அக்காவிடம் பாடம் படிக்கும் போது இப்படி தான் எதையாவது கேட்பாள் அல்லது அடம் பிடிப்பாள். இப்போது பேபி School க்கு(Pre K.G) போயி நிறைய Tamil/English பாட்டு கத்துகிட்டு எங்களுக்கு போன்ல பாடி காட்டுறா.

வருங்கால IAS / IPS / Doctor ஒருத்தங்க எங்க வீட்டுளும் இருக்காங்கப்பா.