நமசிவாய
திங்கள், 24 மே, 2021
கொரோனா
வீட்டுக்குள்ளே இருக்கிற எனக்கு பூரணிக்கு பிரேமா க்கெல்லாம் எப்படி கொரானா வருது என்பது அதிசயமா தான் இருக்கு.
நல்ல வேளை. எனக்கு பாதிப்பு குறைவு தான். உள்காய்ச்சல், உடல் வலி, தலை வலி எல்லாம் வந்தாலும் எப்படியோ தப்புச்சி வந்துட்டேன். 5 days எந்த வாசனையும் சுத்தமா தெரியல. அது வச்சி தான் எனக்கு கொரோனா தான் வந்து இருக்கு ன்னு தெரிஞ்சுகிட்டோம்.
இதுல நான் தாயுமாவருக்கு 2 நன்றி சொல்லணும்.
1. குடும்பத்தில் நோய் பரவாமல் காப்பாற்றியதற்கு
2. கொரோனா வந்தா நல்லா சாப்பிடணுமாம். 2 மாதமா எங்க வீட்ல பழங்கள் இருந்து கிட்டே இருக்கும். அதுவும் எனக்கு பிடிச்ச தேன் வாழை. நானே தினமும் 2, 3 சாப்பிடும் அளவிற்கு இருந்துச்சி. free ஆகவும், ரொம்ப ரொம்ப குறைந்த விலையிலும் எங்களுக்கு அவ்வளவு பழம் கிடைச்சது.
அப்புறம் காளான் வளர்க்கலாம்ன்னு வளர்த்து மார்ச், ஏப்ரல் ல அறுவடை செய்து கிட்ட தட்ட 1.7 kg காளான் நாங்களே சாப்பிட்டோம்.
நான் ஏதோ கொஞ்சம் strength ah இருந்து வெளியே யாருக்கும் சொல்லாமலே கோரோனா வை face பண்ணினேன் என்றால் அது கடந்த 2 மாதத்தில் நான் சாப்பிட்ட இந்த பழம், காளான் கொடுத்த பலம் தான் காரணம்.
கண்டிப்பா இது தாயு கருணை இல்லாம எங்களுக்கு கிடைச்சு இருக்காது.
நோய் வரும் முன்னே எங்களை தயார் படுத்திய அவர் அன்பை எப்படி சொல்லுவது..
நிரு குட்டி
உண்மையில் நிரு குட்டி கடவுள் கொடுத்த வரம். குழந்தையில் அவன் உருவம் அழகோ அழகு. வளர வளர அவன் குணம் அழகோ அழகு. நிவி யோட selfish பேச்சை கேட்கும் போது எங்களுக்கு வரும் சோகத்தை ஆற்றுவதே நிருவின் பேச்சும் செயலும் தான்.
ஒரு குழந்தை நல்லவனா மாறுவதும் கெட்டவனா மாறுவதும் அன்னை வளர்ப்பு சொல்லுறாங்க.
நான் நிவி க்கு நிறைய நிறைய நிறைய advice வாயிலும், கையிலும் சொல்லி வளர்க்கிறேன். இருந்தாலும் அவனோட அந்த selfish, பயம், தற்பெருமை இதெல்லாம் கொஞ்சமும் குறைய மாட்டேங்குது.
நிரு குட்டிக்கு இது வரைக்கும் ஒரு advice கூட சொன்னது இல்லை. ஆனா பொறுப்பா தைரியமா, அன்பானவனா, தற்பெருமை தன்னலம் இல்லாதவனா இருக்கிறான்..
நிரு வை நினைத்தாலே நிறைவு தான்..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)