புதன், 1 ஜூலை, 2009

வாழ்க வளமுடன்


நேற்று (28.06.09) திருச்சி சிதம்பரம் மஹாலில் நடந்த வேதாத்ரி மகரிஷி மனவளக்கலை-ன் பொன் விழாவிற்கு போயிருந்தேன். விழா-வை சிறப்பாக நடத்தினர். விழாவிற்கு தலைவர் SKM மயிலானந்தம் (Mayilanandam) தலைமை வகித்தார். எனக்கு பொதுவாகவே யோகா கலை பயிற்சிக்கு வரும் பலரது பேச்சுக்கள் பிடிக்காது. அவர்கள் தப்பாக எதுவும் பேச மாட்டார்கள் ஆனால் சுவாரசியம் என்று அவர்கள் பேசுவது தத்து பித்து என்று தான் இருக்கும்.

நேற்று நடந்த விழாவில் பேசியவர்கள் 'தலைவர்' 'தலைவர்' என்று தாங்கினாலும் அவரை பற்றி பெருமையாக எதுவும் பேசவில்லை. கடைசியில் தலைவர் பேசினார். அவர் 50 ஆண்டுகளில் மகரிஷியோடு நன்கு பழகியதை முதலில் சொல்லும் பொது மகரிஷி பற்றி பல தகவல்களை தருவார் என்று ஆவலோடு எதிர் பார்த்தேன். ஆனால் அவர் மகரிஷி பற்றி ஒரு 10% தான் பேசி இருப்பார். மீதம் 90% அவர் மகரிஷிக்கு எப்படி உதவி செய்தார் என்பதையும் தன்னால் நமது மனவளக் கலை மன்றம் எவ்வளவு முன்னேற்றம் அடைந்து உள்ளது என்பது பற்றயுமே இருந்தது.

அவரது பேச்சிலிருந்து சில
1. உடல் நலம்: உடல் என்பது அஸ்திவாரம். உடல் நல கோளாறு நம்மையும், நம்மை சுத்தி இருபவர்கயும் கஷ்ட படுத்துகிறது. நமது மகரிஷி எளிமையான பயிற்ச்சிகள் மூலம் அனைவரும் கற்கும் படி செய்துள்ளார். பிறருக்கு சேவை செய்வதற்கு முன் நமக்கு நாமே உடல் பயிற்சி செய்வது மூலம் சேவை செய்து கொள்ள வேண்டும் .

2. மனம்: மனம் என்பது எண்ணங்களின் குவியல். மன நலகுறைவு ஒருவரையும் அவரை சார்ந்தோரையும் அழித்து விடுகிறது.கோபத்தால், மன அழுத்தத்தால் இதயம், நரம்பு, இரத்தம், சுரப்பிகள், ஜீரண உறுப்புக்கள், திசுக்கள் ஆகிய அணைத்து உறுப்புகளுமே சீர்குலைந்து விடும் .

a. மனதின் தரம் = மனிதனின் தரம்
நாம் விடைத்த விதைகளே இன்பமும், துன்பமும், இதன் பலன்கள் நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நம்மை வந்தே சாரும் .
b. சாதாரண அறிவு - எப்படி வாழ்வது, எப்படி வாழ்க்கை நடத்துவது.
பேரறிவு - நான் யார், இறை நிலை என்றால் என்ன, அதனோடு எப்படி சேர்வது
b. அறியாமை - தீய எண்ணங்கள், தீய சொற்கள், கோபம், பொறாமை வர
காரணம் அறியாமையே
c. விருப்பு , வெறுப்புக்கு காரணம் நமது மனமே .
d. இதயம் அன்பால் நிறைய வேண்டும்
e. அமைதியான மனம் ஆராய்ந்து முடிவு எடுக்கும், விவேக சக்தி பெரும், கரும நெறிப்படி வாழ வழி செய்யும்
f. குணங்கள்
மிருக குணம் - சோம்பேறித்தனம், பிறரை கஷ்ட படுத்தி வாழ்வது,
மனித குணம் - சுறுசுறுப்பு, ஆசை, பேராசை,
தெய்வீக குணம் - அன்பு, கருணை, சேவை, இன்சொல், பணிவு
g. சிறந்தது அறவறமா? துறவறம்?
அவர் அவர் நிலைகளின் ஒழுக்க நெறி படி வாழ்வதே சிறந்த அறம் ஆகும் .
i. Insurance - ஆன்மீக இன்சூரன்ஸ் மட்டுமே பலனை உங்களுக்கே கொடுக்கும்.
இவை எல்லாம் மகரிஷி சொன்னவை தான்.

தலைவரின் டாப் 5 (+)
1. ஆசிரியர், பேராசியர்களை கௌரவித்தல் - (தனது சொந்த செலவில் )
2. நவீன நடைமுறைக்கு ஏற்ப C.D போட்டது
3. மனவள கலையை ஆன்மீக கல்வியாக மாற்ற பல்கலைகலகங்களுடன் சேர்ந்தது (Dimploma, B.A., M.A., M.Phil)
4. நிர்வாக பொறுப்பை பிரித்து பிரித்து கொடுப்பது
5. 2 வருடங்களில் இதை எல்லாம் செய்தது

தலைவரின் top 5 (-)
1. பணம், பொருள் இருக்கும் நபர்களிடம் நிர்வாக பொறுப்பு போகிறது(management trusteee - நிர்வகிப்பவர், permenant trustee - மன்றங்களுக்கு இடத்தை தருபவர், donor trustee - குறிப்பிட்ட அளவு நன்கொடை தருபவர் - இவர் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்ற படுவார், etc).
2. தலைவரே தன புகழை அதிகமா பாடுகிறார். மேலும் பணம் கொடுத்து பொறுப்பு பெறுபவர்களுக்கு சில உரிமைகளும் கொடுக்க பட வேண்டும். ஆதலால் இனி வரும் நிர்வாகிகளிடம் பழைய சேவை மனப்பான்மை இனி அரிதாக இருக்கலாம்
3. சேவை செய்பவர்களின் பொறுப்பை அதிக படுத்துவதால் அவர்களால் மன்றங்களுக்கு வரும் நோக்கம் மாறுகிறது.
4. ஆசான் விரும்பிய தனி மனித அமைதி இப்ப அவரிடம் (தலைவரிடம்)இருகிறதா என்று தெரியலை. மற்ற நிர்வாகிகளுக்கு எப்படி வரும்?
5. Matric School, College-கு ஆட்களை பிடிப்பதை போல Diplamo, Degree course க்கு ஆட்களை பிடிக்க ஆசிரியர்களை நிர்பந்தித்தல்.

மகரிஷி - தலைவர் ஒற்றுமை
எனக்கு தெரிந்து ஒன்னும் இல்லை.

மகரிஷி - தலைவர் வேற்றுமை.
மகரிஷி -தனது இந்த யோகா கலை மூலமாக மனிதன் உயர்ந்த நிலைய அடைய பெரிதும் சிரம பட்டார் .
தலைவர் - இந்த யோகா கலை உலகத்துக்கு பிரபல படுத்தவே பெரிதும் சிரம படுகிறார். (இப்ப இருக்கும் கல்விகள் ஒரு வியாபாரமகவே இருக்கிறது. இவரும் இந்த யோக கலையை அந்த வியாபார கூட்டத்தில் சேர்க்க பெரிதும் ஆசை படுகிறார் )

ஒரு மனவளக் கலை மன்றத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர் ஆசான் என்றோ, குரு என்றோ அழைப்பது பொருத்தமாக இருக்கும். அவர் தன்னை தலைவர் தலைவர் என்று அழைப்பதின் மூலம் அவரின் தலை கணமே அதிகம் ஆகுவது போல இருக்கு.


இது எல்லாம் உயர்வான புனித யோக கலையின் மகத்துவத்தையும் மகரிஷியின் நோக்கங்களையும் தாழ்த்தாமல் இருக்க வேண்டும்

வாழ்க வளமுடன்

2 கருத்துகள்:

  1. //ஒரு மனவளக் கலை மன்றத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர் ஆசான் என்றோ , குரு என்றோ அழைப்பது பொருத்தமாக இருக்கும் . அவர் தன்னை தலைவர் தலைவர் என்று அழைப்பதின் மூலம் அவரின் தலை கணமே அதிகம் ஆகுவது போல இருக்கு .
    //
    சரிதான்.

    நல்ல அலசியிருக்கீங்க.

    பதிலளிநீக்கு