புதன், 14 அக்டோபர், 2009

Bonus பிரச்சனை

1. சாக்கடையை சுத்தம் செய்யும் தொழிலாளி சாக்கடை மீதிருக்கும் கல்லை எடுத்துவிட்டு பின் அவர்க்கு சன்மானம் தரும் கடை/வீடு முன் இருக்கும் கல்லையும், சாக்கடை கழிவுகளை மட்டும் சரி செய்கிறார்.

2. கேட்ட பணம் தருபவர்க்கே தன் கடமையை செய்கிறார் மின்வாரிய ஊழியர்கள்

3. பாஸ்போர்ட், பென்ஷன், போன்றவைகளை தகுந்த சன்மானம் பெற்றுக்கொண்டே உரியவர்களிடம் கொடுகின்றனர் அஞ்சலக ஊழியர்கள்

4. 'கொள்முதல் கணக்கை குறிப்பிட்ட தேதியில் சமர்பிக்காவிட்டால் அதிக பணம் கட்டவேண்டி வரும்' என்ற நோட்டீஸ்-யை கொடுத்துவிட்டு அதை கொண்டுவந்ததற்காக பணம் கேட்டு தலை சொரிகிறார் விற்பனை வரி அலுவலக(sales tax office staff) ஊழியர்கள்

5. எந்த சான்றிதழுக்கும் பணத்தை பெற்றுக் கொண்டே தன் கடமையை செய்கிறார் Commercial Tax Officer.

6. கார்ப்பரேஷன் வரி நோட்டீஸ் கொடுக்க வரும் ஊழியர்

7. Traffic signal-லில் நின்று கொண்டு அநியாயமாக பணம் கறக்கும் போக்குவரத்து காவலர்கள்

இவர்களை போல் இன்னும் பலர்.

இப்படி பணத்தை பெற்று கொண்டே வேலை செய்யும் இந்த அரசாங்க பிட்சைக்காரர்கள் தீபாவளிக்கு உரிமையுடன் ஒவ்வொரு வீடு மற்றும் கடைகளுக்கு வந்து பண்டிகை பணம் கேட்கிறார்கள்.
இவர்களுக்கு பயந்து கொண்டே தீபாவளிக்கு இரண்டு நாள் கூடுதலாக விடுமுறை கொடுக்கின்றனர் பல வியாபாரிகள்.

இவர்களுக்கு பணம் கொடுப்பது சரியா?
இவர்களை எப்படி சமாளிப்பது?

ஒருமுறை ஒருவரிடம் அல்லது நான்கு பேரிடம் கூட 'பணம் கொடுக்க முடியாது' என்று சொல்லலாம். தொடர்ந்து வெட்கமில்லாமல் படையெடுக்கும் இவர்களை சமாளிப்பதை பற்றி யாருக்காவது தெரிந்தால் எங்களுக்கும் சொல்லி உதவுங்களேன்.

16 கருத்துகள்:

  1. //பணத்தை பெற்று கொண்டே வேலை செய்யும் இந்த அரசாங்க பிட்சைக்காரர்கள் //

    ஈஸ்வரி... நீங்களே சொல்லிட்டீங்களே கௌரவ பிச்சைக்காரர்கள்னு...

    //இவர்களுக்கு பணம் கொடுப்பது சரியா?
    இவர்களை எப்படி சமாளிப்பது?//

    முடிந்தால் கொடுப்ப‌து... இல்லையென்றால் விர‌ட்டி அடிப்ப‌து...

    //ஒருமுறை ஒருவரிடம் அல்லது நான்கு பேரிடம் கூட 'பணம் கொடுக்க முடியாது' என்று சொல்லலாம். தொடர்ந்து வெட்கமில்லாமல் படையெடுக்கும் இவர்களை சமாளிப்பதை பற்றி யாருக்காவது தெரிந்தால் எங்களுக்கும் சொல்லி உதவுங்களேன்.//

    வெட்கமில்லாமல் கேட்பவரை என்ன செய்ய முடியும் ஈஸ்வரி... இவர்களை சமாளிப்பது என்பது இயலாத காரியம்...

    எனது தீபாவளி பதிவை விஜயம் செய்து உங்களுக்கான "மெகா பரிசை" பெற்று செல்லவும்...

    ந‌ண்ப‌ர்க‌ள் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய‌ தீபாவ‌ளி ந‌ல்வாழ்த்துக்க‌ள்... http://edakumadaku.blogspot.com/2009/10/blog-post.html

    பதிலளிநீக்கு
  2. இதே பிரச்சினைதான்..என்ன செய்யுறதுன்னு தெரியலை... நான் வருஷம் முழுவதும் பார்க்காத ஆளுங்க எல்லாம் தீபாவளி போனஸ் கேட்குறாங்க. குடுத்தாலும், என்ன சார் இதெல்லாம் ஒரு காசா..? மேல போட்டுக்குடுங்கன்றாங்க..

    பதிலளிநீக்கு
  3. அவங்களை ஒண்ணும் பண்ண முடியாது.நாம தரக்கூடாதுன்னு உறுதியா இருந்தாப் போதுமானது.

    பதிலளிநீக்கு
  4. ஸ்ரீ நாம் மட்டும் உறுதியாய் இருந்தால் போதாது நம் வீட்டில்/அலுவலகத்தில் அனைவரும் உறுதியாய் இருக்க வேண்டும். நம் வீட்டில்/அலுவலகத்தில் மட்டும் அப்படி உறுதியாய் இருந்தால் போதாது நம் தெருவில்/ஊரில் அனைவரும் அப்படி இருக்க வேண்டும். இது நடக்கிற காரியமா?

    பதிலளிநீக்கு
  5. கோபி முடியாது என்று சொல்லுவதை விட இதை தடுக்க எதாவது செய்ய வேண்டும்.
    பின்னோக்கி உங்கள் பதிவில் Modern டெக்னாலஜி உபயோகித்து எப்பேர் பட்ட கொலையும் கண்டுபிடிகின்றனர் என்பதை சொல்லி இருக்கீர்கள். நீங்கள் இப்படி புலம்பலாமா? நம் பதிவுலகில் இருப்பவர்கள் அனைவரும் நல்ல அறிவு ஜீவிகள் தான்.
    நம் இந்திய இராணுவத்தினர் உள்நாட்டு கலவரங்களை அடக்க மிளகாய் வெடிகுண்டை கண்டுபிடித்ததை போல நாமும் எதாவது ஒற்றை செய்து இப்படி மிரட்டி போனஸ் கேட்போரை அடக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  6. //Eswari சொன்னது…

    நம் இந்திய இராணுவத்தினர் உள்நாட்டு கலவரங்களை அடக்க மிளகாய் வெடிகுண்டை கண்டுபிடித்ததை போல நாமும் எதாவது ஒற்றை செய்து இப்படி மிரட்டி போனஸ் கேட்போரை அடக்க வேண்டும்.//

    அப்படிதான் ஏதாவது பண்ணனும் போல இருக்கு ஈஸ்வரி...

    பதிலளிநீக்கு
  7. நாங்க பொங்கலுக்கு தான் கொடுக்கும் பழக்கம்னு சொல்லுங்க! கேட்டா சுத்த தமிழர்ன்னு உதார் விடுங்க!

    பொங்களுக்கு கேட்டா, எப்பவும் தீபாவளிக்கு தானே கேட்பிங்கன்னு சொல்லுங்க!

    பதிலளிநீக்கு
  8. //வால்பையன் சொன்னது…
    நாங்க பொங்கலுக்கு தான் கொடுக்கும் பழக்கம்னு சொல்லுங்க! கேட்டா சுத்த தமிழர்ன்னு உதார் விடுங்க!//

    Nalla idea than.....

    பதிலளிநீக்கு
  9. இதையெல்லாம் தடுக்க ஒரு வழி உள்ளது. வருபவரிடம், பெயர், பதவி ஆகியவற்றை கேளுங்கள். எதற்கு என்பார், லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் புகார் செய்வதற்குத்தான் என்று சொல்லுங்கள். அவர் பதறிப் போய் (போயே) விடுவார்.

    (ஆனால் ஒன்று, இதனால் வரும் பின்விளைவுகளுக்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்)

    இப்படி எல்லோரும் செய்தல் நிச்சயம் இரண்டு மூன்று வருடங்களில் இந்த தொல்லையை நிறுத்தி விடலாம்.

    (சொல்ல ஈசியாதான் இருக்கு இல்ல!!!!!!!)

    பதிலளிநீக்கு
  10. //சொல்ல விருப்பமில்லை
    (சொல்ல ஈசியாதான் இருக்கு இல்ல!!!!!!!)//
    s s

    பதிலளிநீக்கு
  11. //வருபவரிடம், பெயர், பதவி ஆகியவற்றை கேளுங்கள். எதற்கு என்பார், லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் புகார் செய்வதற்குத்தான் என்று சொல்லுங்கள். அவர் பதறிப் போய் (போயே) விடுவார்.//

    என்று ஐடியா சொல்லிவிட்டு பின் //(சொல்ல ஈசியாதான் இருக்கு இல்ல!!!!!!!)// என்று கேட்ட‌ அண்ண‌ண் "சொல்ல‌ விருப்ப‌மில்லை"க்கு ஒரு பெரிய‌ ஓ....

    சொல்ல சொல்லன்னு சொல்லி, இந்த சொல்லங்கற வார்த்தை இனிமே மறக்காது போல இருக்கு... என்ன சொல்றீங்க ஈஸ்வரி...?/!!

    பதிலளிநீக்கு
  12. //சொல்ல சொல்லன்னு சொல்லி, இந்த சொல்லங்கற வார்த்தை இனிமே மறக்காது போல இருக்கு... என்ன சொல்றீங்க ஈஸ்வரி...?/!!//

    s s gopi

    பதிலளிநீக்கு
  13. இதைவிட ஒரு சூப்பர் ஐடியா என்கிட்டே இருக்கு. ஆனா, அதை சொல்வதற்கு எனக்கு என்ன கொடுப்பீங்க.

    இது எப்படி இருக்கு????

    பதிலளிநீக்கு
  14. தீபாவளிக்கு நான் செய்த அதிரசமும், முறுக்கும் கொடுப்பேன்.

    மாட்டிகிட்டிங்களா !!!!

    பதிலளிநீக்கு
  15. //இப்படி பணத்தை பெற்று கொண்டே வேலை செய்யும் இந்த அரசாங்க பிட்சைக்காரர்கள் தீபாவளிக்கு உரிமையுடன் ஒவ்வொரு வீடு மற்றும் கடைகளுக்கு வந்து பண்டிகை பணம் கேட்கிறார்கள்.//

    சரியா சொன்னீங்க போங்க....இதே பிரச்சனை எல்லா இடத்திலயும்....இதுக்கு பேசாம கோயில் முன்னாடியே உட்காந்துக்கலாம்....

    பதிலளிநீக்கு
  16. க.பாலாசி சொன்னது…
    //இதுக்கு பேசாம கோயில் முன்னாடியே உட்காந்துக்கலாம்...//

    இவர்கள் எல்லாம் கௌரவ பிச்சைக்காரர்கள். கோவிலில் உட்காறமாட்டார்கள் அரசு அலுவலகத்தில் மட்டும் தான் உட்காருவார்கள்

    பதிலளிநீக்கு