எத்தனை வாய்க்கால்கள், குளங்கள், ஆறுகள். இவற்றில் எல்லாம் நீர் இருக்கும் போது எவ்வளவு அழகு எங்கள் திருச்சி.
இத்தனை புகழுக்கும் சொந்த காரர் ஒருவரே. அவர் தான் மாமன்னர் கரிகாலச் சோழர். கல்லணையை கட்டியவர் நாடு சிறப்புற நீரை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பதை திட்டமிட்டு செயல் படுத்தியவர். அப்போது உறையூர் தான் சோழ நாட்டின் தலைநகராக இருந்தது.
மேலும் அக்கால மன்னர்களால் கட்டப்பட்ட பெரிய பெரிய கோவில்களையும், அதில் உள்ள சிற்ப வேலைப்பாடுகளையும் இந்நாளில் யாரால் செய்ய முடியும்? எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அழியா புகழுடைய கோவில்கள் அல்லவா அவைகள்? தலை நகரத்திற்குரிய அழகு என்றும் அழியாத அழகாய் இன்றும் அக்கோவில்கள் திருச்சியை அழகு படுத்திகொண்டு இருக்கின்றன.
ஆறுகளையும், குளங்களையும் வெட்டியதும் கோவில்கள் கட்டியதும் சோழ மன்னர்களாக இருந்தாலும், பின்னாளில் வந்த பல மாமன்னர்கள் அதாவது, பாண்டிய மன்னர்களும், பல்லவ மன்னர்களும் கோவில்களை மேலும் பெரியதாகவும், சிறப்புடையதாகவும் வளர்த்தனர் என்பது இக்கோவில்களில் உள்ள தூண்களையும் , சிற்பங்களையும் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். அத்தகைய சிறப்பு வாய்ந்த கோவில்களை பற்றி இங்கு பார்ப்போம்.
எனக்கு என் சொந்த ஊரைப் பற்றி அதிகம் தெரியாது. நான் பிறந்தது வளர்ந்ததெல்லாம் நீலகிரி. அதனால் உங்கள் கட்டுரைகள் மூலமாக என் சொந்த ஊரைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன். தொடர்ந்து எழுதுங்கள்.
பதிலளிநீக்குமுயற்சி செய்கிறேன் ரமேஷ். எனக்கு கவிதை, கட்டுரைகள் எழுதி பழக்கம் இல்லை. இந்த பதிவு ஆரம்பித்த பிறகு எனக்கே சிறிது பயம் தான். என்னால் 'நா ரசிச்சதை அழகா எழுத முடியமா?' என்று. பெரும்பாலும் கோவில்களைப் பற்றியே எழுத போவதால் இறைவனை வேண்டிக் கொண்டு தொடர்கிறேன்.
பதிலளிநீக்குமாணிக்க வினாயகர் பற்றி எழுதுங்க
பதிலளிநீக்குஎழுதுகிறேன் jaisankar jaganathan
பதிலளிநீக்குபோட்டோ பிடிச்சி போட்டா, நேர்ல பார்த்தா மாதிரி ஒரு எபெக்ட் கிடைக்கும்!
பதிலளிநீக்குபோடுவிங்கலா?
முயற்சி செய்கிறேன் வால்ஸ்
பதிலளிநீக்குதிருச்சியில் 3 ஆண்டுகள் பட்டப்படிப்பு படித்த காலங்கள்தான் என் வாழ்வின் பொற்காலங்கள். இன்றைக்கும் உங்க ஊர் எதுன்னு யாராவது கேட்டா புதுக்கோட்டைன்னு சொல்றதுக்கு பதிலா முதலில் திருச்சின்னுதான் வரும்.
பதிலளிநீக்குtamil typing idile seyya mudiyalai... Enendru theriyalai.... Irukattum ... ipadiye vasipom maaru eerpadu varum varaikum.....Enakkum trichythan piditha uuraka irundhathu february varai.. Epovume trichy pidikum endralum feb. ku apuram konjam vilakiya nilai... makkal romba adavadi ayitangal.. neraiya poi .. pithalaattam... ELLAm valarcciyam....enge poi nikumo.... marra pala uurkalum ipadithan maari ELLAME ondru pole aaki varukinrana.... kaalathin kolamthan... parpom innum ennenna kudukal kathirukindarana enpathai .... uyir irukum varai..... narendran109@gmail.com
பதிலளிநீக்குதிருச்சியை ரசிச்சாச்சு. அப்புறம் அடுத்த பதிவு எங்க
பதிலளிநீக்கு