செவ்வாய், 1 செப்டம்பர், 2009

திருச்சியை ரசிப்போம் வாங்க - ஸ்ரீரங்கம் - அழைப்பு 3


ஓம் நமோ நாராயண

பூ என்றால் அது தாமரை மலரையும்
கோவில் என்றால்
சைவத்திருக்கு (சிவன்) சிதம்பரமும்
வைணவத்திற்கு (பெருமாள்) திரு அரங்கத்தையும் குறிக்கும்.
வைணவ த்திருத்தலங்களுக்கெல்லாம் முழு முதன்மையானது ஸ்ரீரங்கம் ஆகும். அதனால் தான் இங்கு இருக்கும் பெருமாளை 'பெரியவர்' என்றே அழைப்பர் வைணவர்கள்.

கோபுர வாசல்கள் மொத்தம் ஏழு. முதல் மூன்று வாசல்களில் வீதிகள், குடியிருப்புகள், கடைகள் இருக்கும், அடுத்த நான்கு வாசல்களும் கோவிலுக்கு உரித்தானவை.


இக்கோவிலுக்கு மொத்தம் 21 கோபுரங்கள் இருக்கின்றன.


அதில் முதல் கோபுரமான ராஜா கோபுரம் ஆசியாவிலே இரண்டாவது மிக பெரிய கோபுரம் என்ற பெருமைக்குரியது. இது 17 ம் நூற்றாண்டிலே கட்ட ஆரம்பிக்கப் பட்டாலும் 1987 ம் ஆண்டு தான் கட்டி முடிக்கப் பட்டது.இக்கோபுரத்தீன் கீழ் நிற்கும் போதும் குளிந்த காற்று நம்மை வருடிச் சென்று மனதுக்கும், உடலுக்கும் ஒரு புத்துணர்வு கொடுக்கும் நிலை ஆனந்தமானது.


அக்காலத்தில் மன்னர்கள் ஏன் பெரிய பெரிய கோவில்களை கட்டி, அதனை பராமரிக்க பல ஏக்கர் நிலங்களையும் விட்டு சென்றனர்?
1. அக்காலத்தில் சிற்பம், ஓவியம், இயல், இசை, நாடகம், போன்ற பல கலைகளுக்கு புகலிடமாக கோவில்கள் இருந்தன. அதனால் தான் கோவிலுக்கு போகும் போது குளித்துவிட்டு சுத்த பத்தமா, நல்லா ஆடைகள் அணிந்து போகணும் ன்னு சொல்லுவாங்க. ஏனெனில் பல கலைகளுக்கும் புகலிடமாக இருக்கும் இடத்தில் நம் உடல் துர்நாற்றத்தினால் கலைகளை ரசிக்க வருபவர்கள் பாதிக்க கூடாதுன்னு தான் அப்படிப்பட்ட பழக்கத்தை ஏற்படுத்தினார்கள். ஆனால் நாம் இறைவன் அருள் பெற மனம் மட்டும் சுத்தமாக இருந்தால் போதும்

சிறிய கோவில்களே கலைகளுக்கு புகலிடமாக இருந்த போது ஸ்ரீரங்கம் இருந்திருக்காதா?
கட்டுத் தரிக்கும் கவிபாடும் திறன் கொடுத்த நம் கம்பர் இங்குதான் தனது அழியா காவியமான கம்ப ராமாயணத்தை அரங்கேற்றினார். அந்த மண்டபம் இதோ..


இந்த மண்டபத்தை பார்க்கும் போது கம்பனின் புகழ் தெரிந்தவர்களுக்கு கண்டிப்பாக 'எப்பேர்ப்பட்ட கவிஞன் தான் அழியாக் காவியத்தை அரங்கேற்றிய இடம்' என்ற நினைவு வரும். அப்போது கைகள் தானாக அவ்விடத்தை தொட்டு பார்க்க ஆசைப்படும்

கலைகளுக்கு புகலிடமாக கோவில்கள் இருந்தன
கலைகளுக்கு தலைவனாக இறைவன் இருக்கிறான்
.

அதனால் தான் இன்னும் நம் தமிழ் இசை அமைப்பாளர்கள்(A.R. ரகுமான், இளையராஜா, விஸ்வநாதன்..), பாடகர்கள்(SPP, ஜேசுதாஸ், நித்யஸ்ரீ ...) பலரும் ஆன்மீகத்தில் அதிகம் ஈடுபாட்டுடன் இருக்கின்றனர்.

12 கருத்துகள்:

  1. இந்தவாரம் ஸ்ரீரங்கம் தான் போகப்போறேன்.
    இன்னும் எழுதீருக்கலாம்...
    பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  2. ஏழு வாசல்களைக் கடப்பது என்பது ஏழு பிறவிகளை அதன் பாவங்களைக் கடப்பதன் குறியீடு என்று சொல்லப்படுகிறதே? அப்படியா?

    பதிலளிநீக்கு
  3. #ஸ்ரீரங்கத்தை பத்தி ஒரு பதிவில் முடிக்க முடியுமா? பதிவுகள் தொடரும் கார்த்திக்.

    #ஆம் ஸ்ரீ. நம் கோவில்களை பொறுத்தவரை ஒவ்வொரு செயலுக்கும் அர்த்தம் உண்டு.

    பதிலளிநீக்கு
  4. //பூ என்றால் அது தாமரை மலரையும்
    கோவில் என்றால்
    சைவத்திருக்கு (சிவன்) சிதம்பரமும்
    வைணவத்திற்கு (பெருமாள்) திரு அரங்கத்தையும் குறிக்கும்.//

    ந‌ல்ல‌ விள‌க்க‌ம் ஈஸ்வ‌ரி (வ‌ழ‌க்க‌ம் போல‌வே...)..

    //வைணவ த்திருத்தலங்களுக்கெல்லாம் முழு முதன்மையானது ஸ்ரீரங்கம் ஆகும். அதனால் தான் இங்கு இருக்கும் பெருமாளை 'பெரியவர்' என்றே அழைப்பர் வைணவர்கள். //

    நான் ப‌ல‌முறை சென்றுள்ளேன்... என‌க்கு மிக‌வும் பிடித்த‌ கோயில்க‌ளுள் திருவ‌ர‌ங்க‌மும் ஒன்று...

    //கோபுர வாசல்கள் மொத்தம் ஏழு. முதல் மூன்று வாசல்களில் வீதிகள், குடியிருப்புகள், கடைகள் இருக்கும், அடுத்த நான்கு வாசல்களும் கோவிலுக்கு உரித்தானவை. //

    ப‌லே த‌க‌வ‌ல்க‌ள்...

    //இக்கோவிலுக்கு மொத்தம் 21 கோபுரங்கள் இருக்கின்றன. //

    ம‌லைக்க‌ வைக்கிற‌து...

    //அதில் முதல் கோபுரமான ராஜா கோபுரம் ஆசியாவிலே இரண்டாவது மிக பெரிய கோபுரம் என்ற பெருமைக்குரியது.//

    முன்பு எங்கோ ப‌டித்த‌து ஈஸ்வ‌ரி... இப்போ ம‌றுப‌டியும் ஞாப‌க‌ப்ப‌டுத்திட்டீங்க‌...

    //இக்கோபுரத்தீன் கீழ் நிற்கும் போதும் குளிந்த காற்று நம்மை வருடிச் சென்று மனதுக்கும், உடலுக்கும் ஒரு புத்துணர்வு கொடுக்கும் நிலை ஆனந்தமானது. //

    ஆமாம்... ஆனந்த‌ த‌ரிச‌ன‌ம் முடிந்து, மெல்லிய‌ குளிர் காற்று ந‌ம்மை த‌ழுவி செல்லும்போது ஆஹா... திவ்ய‌ம்...

    //அக்காலத்தில் சிற்பம், ஓவியம், இயல், இசை, நாடகம், போன்ற பல கலைகளுக்கு புகலிடமாக கோவில்கள் இருந்தன. அதனால் தான் கோவிலுக்கு போகும் போது குளித்துவிட்டு சுத்த பத்தமா, நல்லா ஆடைகள் அணிந்து போகணும் ன்னு சொல்லுவாங்க. ஏனெனில் பல கலைகளுக்கும் புகலிடமாக இருக்கும் இடத்தில் நம் உடல் துர்நாற்றத்தினால் கலைகளை ரசிக்க வருபவர்கள் பாதிக்க கூடாது//

    மிக‌ ச‌ரியே... நாம் சுத்த‌மாக‌ இருந்தால், இறைவ‌னை த‌ரிசிக்க‌ வ‌ருப‌வ‌ர்க‌ளின் பார்வை அவ‌ன் மேல் இருக்கும்... இல்லையேல், அடுத்த‌வ‌ர்க‌ளின் வ‌ழிபாடு த‌டைப‌டும்... ந‌ல்ல‌ விள‌க்க‌ம்...

    //ஆனால் நாம் இறைவன் அருள் பெற மனம் மட்டும் சுத்தமாக இருந்தால் போதும் //

    ஓம் ந‌மோ நாராய‌ணாயா.... என‌க்கும் சிறிது அருள்வாயா திருவ‌ர‌ங்க‌னே??!!

    //கலைகளுக்கு புகலிடமாக கோவில்கள் இருந்தன
    கலைகளுக்கு தலைவனாக இறைவன் இருக்கிறான். //

    ம்ம்ம்... அவ‌ன‌ன்றி ஓர‌ணுவும் அசையாது.. அவ‌னின் அருளின்றி நாம் அனைவ‌ரும் ஏது?

    //அதனால் தான் இன்னும் நம் தமிழ் இசை அமைப்பாளர்கள்(A.R. ரகுமான், இளையராஜா, விஸ்வநாதன்..), பாடகர்கள்(SPP, ஜேசுதாஸ், நித்யஸ்ரீ ...) பலரும் ஆன்மீகத்தில் அதிகம் ஈடுபாட்டுடன் இருக்கின்றனர். //

    மிக‌ ச‌ரி....

    ஈஸ்வ‌ரி வாழ்த்துக்க‌ள்... ம‌ற்றுமொரு அருமையான‌ ப‌திவு...

    பதிலளிநீக்கு
  5. ஸ்ரீரங்கம் கோவிலை பிடிக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. அதனால் தானே ஸ்ரீரங்கத்தை பூலோக வைகுண்டம் என்று அழைக்கிறோம். பின்னூட்டத்திற்கு நன்றி Gopi

    பதிலளிநீக்கு
  6. கடைசி தடவை போகும் போது 2 மணி நேரம் காக்கவேண்டி இருந்தது. கூட்டம் இல்லாத கோவில்களில் கிடைக்கும் மன அமைதி, புகழ் பெற்ற கோவில்களில் கிடைப்பதில்லை.

    சாட்டிலைட் படம் உபயோகப்படுத்தி இருப்பது நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. படங்களுக்கு நன்றி!
    முக்கியமா டாப் ஆங்கிள் படம் சூப்பர்!

    பதிலளிநீக்கு
  8. ஸ்ரீரங்கத்தில்தான் நான் கம்ப்யூட்டர் படிச்சேன்.தேவி தியேட்டர் பக்கத்தில்தான் அந்த சென்டர் இருந்தது.அப்படியே சைக்கிள் கேப்பில் அடையவளஞ்சான் தெருவில் ஒரு பொண்ணையும் சைட் அடித்தேன். பட் ஓர்கவுட் ஆகல :(

    பதிலளிநீக்கு
  9. இந்தக் கோவிலில் என்னைக் கவர்ந்தது பெருமாளை தரிசிக்கும் முறை தான். கருவறையில் மின் விளக்கு இல்லாமல் தீப் பந்தத்தால் அவர் கால் முதல் தலை வரை ஒளியூட்டிக் காட்டுவது மிக மிக அழகான தரிசனம். புகைப்படம் போல மதில் படம்பிடித்து நினைத்து நினைத்து ரசிக்கலாம்.

    பதிலளிநீக்கு
  10. #எம்.எம்.அப்துல்லா
    திருச்சியில் நீங்கள் ரசித்தவைகளையும்(தனிப்பட்ட பெண்களை தவிர)இங்கு எழுதலாமே?

    #shri ramesh sadasivam
    பழமையான கோவில்களில் பெரும்பாலும் கருவறையில் மின் விளக்குகள் இருக்காதே...

    பதிலளிநீக்கு
  11. //#எம்.எம்.அப்துல்லா
    திருச்சியில் நீங்கள் ரசித்தவைகளையும்(தனிப்பட்ட பெண்களை தவிர)இங்கு எழுதலாமே? //

    இது அப்துல்லா அண்ணனுக்கு இடபட்ட ஒரு சோதனையாக கருதுகிறேன்!

    பதிலளிநீக்கு
  12. ஆமா இருக்காது தான். இந்தக் கோவில்ல அத இன்னும் அப்படியே மாற்றாமல் கடைப்பிடித்து வருகிறார்கள், அது அழகாக இருக்கிறது என்று நல்ல விதமாகத் தானே சொன்னேன்.... :)

    பதிலளிநீக்கு