18.07.09 அன்று நானும் என் அம்மாவும் என் அக்கா வீட்டிற்க்கு (ஈரோடு) சென்றோம். பிறகு அங்கிருந்து கர்நாடக எல்லையில் இருக்கும் மாதேஸ்வரன் மலைக்கு சென்றோம். மிகவும் அற்புதமான இயற்கை சூழலில் இருக்கும் அந்த மலை கோவிலுக்கு எங்க ஊர்காரர்கள் (ராசிபுரம், சேலம், ஈரோடு) பல காலமாக (கிட்ட தட்ட 60,70 வருடங்களாக) வருடம் தவறாமல் போயி வருகிறார்கள். என் அக்காவின் மாமனார், மாமியார், என் அம்மா என அனைவரும் அவர்கள் சிறு வயதில் அவர்களின் தாத்தா, பாட்டியுடன் நடந்தே அந்த காட்டு மலை பாதையில் கோவிலுக்கு போயி இருக்கிறார்கள். ஒரு வார பயணமாக இருக்குமாம். இடையில் சிங்கம், புலி வந்தால் 'மாதையா காப்பாத்து , மாதையா காப்பாத்து' ன்னு கத்துவாங்கலாம். இவர்கள் கத்தலை கேட்டு (சகிக்கமலோ என்னவோ!!!) புலி, சிங்கம் எல்லாம் ஓடிடுமாம். (அப்புறமா தான் தைரியமா நம்ப வீரப்பன் அண்ணன் வந்தாங்க) சக்தி வாய்ந்த அந்த தெய்வத்தை தரிசித்துவிட்டு திரும்பும்போது மேட்டூர் போனோம்.
அங்கு நம் ஊர் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கண்கூடாக பார்த்தேன்.. அன்று ஞாயிற்று கிழமை ஆதலால் ஊர்க்காரர்கள் எல்லாம் அரிசி, மளிகை பொருட்களை எடுத்து வந்து அங்கேயே மீன் வாங்கி குழம்பு வச்சு சமைத்து அந்த இடத்தையே நார வச்சு இருந்தார்கள். (வாரம் வாரம் இவர்கள் செய்யும் இந்த அட்டகாசத்தையும் தாண்டி பூங்காவை நன்றாக பராமரித்து வரும் பணியாளர்களுக்கு பாராட்டுகள்). அடுத்து அங்கு இருக்கும் உயிரியல் பூங்கா (zoo) வில் இருக்கும் பாம்பை பார்த்து பக்தியோடு இவர்கள் போட்ட காணிக்கை பார்த்து எனக்கு சிரிப்பு தான் வருது. அதுவும் சதா பாம்புக்கு காசாகவும், மலைப் பாம்புக்கு ரூபாய் நோட்டுக்கலாகவும் போட்ட இவர்களது பக்தியை என்ன வென்று சொல்லுவது???
இதெல்லாம் பார்த்த பிறகு நம் நாட்டு பண்பாடு கலாச்சாரம் கேட்டு போச்சு ன்னு சொன்னவங்க மேல கோபம் கோபமா வந்துச்சு. இப்படி பட்ட மனுசங்க இருக்கிற வரை நம் கலாச்சாரம் ஒரு நாளும் அழியாது.
உண்மையில் நம் கலாச்சாரம் அறியாமையில் ஏற்பட்டதல்ல. இவர்கள் அறியாமையில் செய்வதெல்லாம் நம் கலாச்சாரத்தின் நிழல் தான். நிஜம் கிடையாது.
பதிலளிநீக்குஎது அறியாமை? குடும்பத்தோடு கோவில்கள், நீர்நிலைகள் போன்ற இடங்களுக்கு சோறு கட்டிக்கிட்டு போயீ கொண்டாடியது பல காலமாக கடைபிடிக்க படும் பழக்கம். அதே போல பாம்புக்கு பயந்தாலும் அதுக்கு கோவில் கட்டி காணிக்கை போட்டு கும்பிடுவதும் நம் கலாச்சாரம் தான். எனவே நா சொன்னது நம் கலாச்சரத்தின் அறியாமையோ, நிழலோ இல்லை. இதெல்லாம் நம் கலாச்சரத்தின் நிஜம் என்பதை நீங்க ஒத்துக்கொள்ள தான் வேண்டும்.
பதிலளிநீக்கு//சதா பாம்புக்கு காசாகவும், மலைப் பாம்புக்கு ரூபாய் நோட்டுக்கலாகவும் போட்ட இவர்களது பக்தியை என்ன வென்று சொல்லுவது???//
பதிலளிநீக்குஇதைத் தான் அறியாமை என்று சொல்கிறேன்.
ஆன்மிகம் அறிந்தவர்கள் இப்படி வழிபட மாட்டார்கள். நம் கலாச்சாரத்தை உருவாக்கிய முன்னோர்கள் ஆன்மிகம் அறிந்தவர்கள். எதையும் காரணத்தோடு செய்தார்கள். இப்பொழுது காரணமே தெரியாமல் தான் பல விஷயங்கள் செய்கிறோம். காரணத்தை விட்டுவிட்டு செயலை மட்டும் பிடித்துக் கொண்டிருக்கிறோம். அதனால் தான் நாத்திகர்கள் கிண்டலுக்கு இந்து மதம் ஆளாகிறது!
அதனால் தான் இன்று இருப்பது வெறும் நிழல் என்றேன்.
நன்றிகள் shri ramesh sadasivam
பதிலளிநீக்குபாம்புக்கு பால் வார்ப்பது, சில்லறை போடுவது எல்லாம் சினிமாவும், மற்ற ஊடகங்களும் செய்த சதி என்றே தோன்றுகிறது. நம்ம ஊர் கலாச்சாரம் எல்லாம் சொல்லி கொடுக்கப்பட்டதே தவிர காலஙகாலமாய் மருவி வந்தது அல்ல என்பது என் எண்ணம்.
பதிலளிநீக்குஷாட்ர் அண்ட் ஸ்வீட் பயணக்கட்டுரை.
பதிலளிநீக்கு//நம் நாட்டு பண்பாடு கலாச்சாரம் கேட்டு போச்சு ன்னு//
தெளிவாக நாட்டு பண்பாடு கலாச்சாரம் என்று சொல்லியிருந்தும் மதத்தை உள்ளிழுத்த நண்பருக்கு நன்றிகள் என்று பின்னூட்டத்தை முடித்துவைத்த உங்களை பாராட்டுகிறேன். விவாதமுரண்.
(அந்த பின்னூட்ட சொல் சரிபார்ப்ப எடுத்துவிட்றுங்க)
Cable Sankar
பதிலளிநீக்கு//பாம்புக்கு பால் வார்ப்பது, சில்லறை போடுவது எல்லாம் சினிமாவும், மற்ற ஊடகங்களும் செய்த சதி என்றே தோன்றுகிறது.//
சினிமாவும் மற்ற ஊடகங்களும் வரும் முன்னே பாம்புக்கு பால் வார்க்கும் பழக்கம் இருந்தாலும் காலத்திற்கு ஏற்ப (காசு போடுவது) மாறி வருகிறது.
உங்கள் வருகைக்கும் பின்னுட்டதிர்க்கும் நன்றிகள்.
பீர் | Peer
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் பின்னுட்டதிர்க்கும் நன்றிகள்.
நல்ல பகிர்வு, நான் இது வரை அங்கே சென்றதில்லை. சற்று விரிவாக எழுதியிருக்கலாமே?
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ஸ்ரீ.
பதிலளிநீக்குஉண்மைய சொல்லனும்னா எழுதுவதே எனக்கு புதுசு இதுல எங்க வர்ணிச்சு விவரமா எழுதுறது??? அதன் சுருக்கமா எழுதிட்டேன்.
உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி வண்ணத்துபூச்சியார்
பதிலளிநீக்குநல்ல பகிர்வு!! நம் தள்த்துக்கு வரவேற்கிறேன்.
பதிலளிநீக்குநன்றி தேவன் மாயம்
பதிலளிநீக்குஎன்ன தோழி விவாதம் செய்ய அழைத்தீர்கள். சென்று பின்னூட்டம் இட்டேன். யாரும் கண்டுகொள்ள மாட்டேன் என்கிறார்கள். :)
பதிலளிநீக்குநான் வரவும் கொஞ்சம் தாமதமாகிவிட்டது. சரி இனிமே, விவாதம் ஆரம்பிக்கும் பொழுதே கூப்பிடுங்க...
வணக்கம்.!நல்ல பகிர்வு!
பதிலளிநீக்கு//18.07.09 அன்று நானும் என் அம்மாவும் என் அக்கா வீட்டிற்க்கு (ஈரோடு) சென்றோம். பிறகு அங்கிருந்து கர்நாடக எல்லையில் இருக்கும் மாதேஸ்வரன் மலைக்கு சென்றோம்.//
பதிலளிநீக்குநன்று.... பயணத்தை அனுபவித்தீர்களா??
//மிகவும் அற்புதமான இயற்கை சூழலில் இருக்கும் அந்த மலை கோவிலுக்கு எங்க ஊர்காரர்கள் (ராசிபுரம், சேலம், ஈரோடு) பல காலமாக (கிட்ட தட்ட 60,70 வருடங்களாக) வருடம் தவறாமல் போயி வருகிறார்கள்.//
ஒ..... அவ்ளோ பழமை வாய்ந்ததா?
//என் அக்காவின் மாமனார், மாமியார், என் அம்மா என அனைவரும் அவர்கள் சிறு வயதில் அவர்களின் தாத்தா, பாட்டியுடன் நடந்தே அந்த காட்டு மலை பாதையில் கோவிலுக்கு போயி இருக்கிறார்கள். //
அப்போ அவங்க எல்லாம் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்திருக்கிறார்கள்.... இப்போதான், பத்தடி நடந்தா மூச்சு வாங்குது....
//இடையில் சிங்கம், புலி வந்தால் 'மாதையா காப்பாத்து , மாதையா காப்பாத்து' ன்னு கத்துவாங்கலாம். இவர்கள் கத்தலை கேட்டு (சகிக்கமலோ என்னவோ!!!) புலி, சிங்கம் எல்லாம் ஓடிடுமாம்.//
ஆ....ஹா..... இது வேறயா?
//அன்று ஞாயிற்று கிழமை ஆதலால் ஊர்க்காரர்கள் எல்லாம் அரிசி, மளிகை பொருட்களை எடுத்து வந்து அங்கேயே மீன் வாங்கி குழம்பு வச்சு சமைத்து அந்த இடத்தையே நார வச்சு இருந்தார்கள்.//
இது தானே நம்ம ஆளுங்களோட ஸ்பெஷாலிடி...... இந்த கூத்து எல்லாம் நான் சென்னை ஏர்போட்டில் கூட பார்த்தேன்.... பெரிய போஜன விருந்து 15-20௦ பேருக்கு நடந்தது....
//பாம்பை பார்த்து பக்தியோடு இவர்கள் போட்ட காணிக்கை பார்த்து எனக்கு சிரிப்பு தான் வருது. அதுவும் சதா பாம்புக்கு காசாகவும், மலைப் பாம்புக்கு ரூபாய் நோட்டுக்கலாகவும் போட்ட இவர்களது பக்தியை என்ன வென்று சொல்லுவது???//
ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல ஈஸ்வரி....
//இப்படி பட்ட மனுசங்க இருக்கிற வரை நம் கலாச்சாரம் ஒரு நாளும் அழியாது. //
உண்மை...உண்மையோ உண்மை..... நல்லா எழுதி இருக்கீங்க ஈஸ்வரி....
நானும் மாதேஸ்வரன் மலைக்கு போயிட்டு வரும் போது பசங்க கூட போன மேட்டுர் போயி முனிய பாத்துட்டு பார்க்க நாரடிச்சிட்டு தாங்க வ்ருவோம்.
பதிலளிநீக்குகலாச்சாரம் முக்கியமில்லைங்களா :-))
ஆனா பாம்புக்கு மட்டும் காசு போடுரதில்லைங்க.
நன்றி R.Gopi & கார்த்திக் . உங்கள் பின்னூட்டங்களும் ரசிக்கும் படியாகவே இருக்கு.
பதிலளிநீக்குகடவுள் நேற்று முளைத்த காளானா..
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன்.
http://shanthru.blogspot.com/2009/08/blog-post_11.html
நன்பரே இந்த விவாதத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்களேன்.
பதிலளிநீக்குhttp://oviya-thamarai.blogspot.com/2009/08/2.html
நன்றி
நல்லா இயல்பா எழுதறிங்க..நிறைய எழுதுங்க..வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்குநன்றி தண்டோரா ......
பதிலளிநீக்கு