சனி, 16 ஜனவரி, 2021
கடவுளின் வரங்கள் 1
உண்மையில் நான் போன பிறவியில் என்ன புண்ணியம் செய்தேன்னு தெரியல, தாயுமானவர் என்கூடவே இருந்து எனக்கு தேவையானவற்றை எல்லாம் கொடுக்கிறார்.
அவர் கொடுத்த 3 வரங்கள் என் கணவர், என் 2 குழந்தைகள்.
என் நிவேதனின் very special character 1. அவனின் வைராக்கியம் (சிலர் அதை பிடிவாதம், முரட்டு குணம் னு சொல்லுவாங்க )
நிவேதன் 2.9 வயது வரை பகலிலும் நல்லா தூங்குவான். அதுவும் தூக்கம் வந்துட்டா இடம், நேரம் பார்க்காமல் தூங்குவான்.
அவன் Pre KG போன போது பள்ளியில் என்ன நடந்ததுன்னு தெரியல..
வீட்டுக்கு வந்து 3 4 நாட்களாக "நான் பகலில் தூங்க மாட்டேன்ம்மா" ன்னு அடிக்கடி சொல்லிகிட்டே இருந்தான். நானும் "சரி தூங்கவில்லை என்றாலும் பரவாயில்ல " என்றேன்.
"miss சொன்னாலும் தூங்க மாட்டேன்" என்றான்.
நானும் "miss கிட்ட நான் school க்கு தூங்க வரவில்லைன்னு" சொல்லு என்றேன்.
நான் விளையாட்டா தான் சொன்னேன்..
என்ன நடந்ததோ, அவன் சொன்ன அந்த நாளில் இருந்து இப்போது வரை அவன் பகலில் தூங்குவது இல்லை!
2. 1st std ல நிவி 4th rank. நிரு குட்டி 1st rank. Annual Day ல நிரு prize வாங்கியதை பார்த்து நிவி "அடுத்த வருடம் நான் தான் 1st rank வாங்குவேன். இவன் 4th rank வாங்குவான்" ன்னு 2 3 தடவ சொன்னான்.
அவன் சொன்னது போலவே அடுத்த வருடத்தில் இருந்து 1st rank தான் எடுக்கிறான். அதுவும் 20, 30 marks leading ல்...
3. நிவி சரியான சாப்பாடு பிரியன்.
ஆனால் இந்த 10 வயதில் அவன் weight 40 kg..
நானும் அவங்க அப்பாவும் சாப்பாடு குறைக்க சொல்லும் போது கேட்கல. நிரு,
பாலா, காகினியும் அவனை குண்டன் என்று கிண்டல் செய்யும் போது என்கிட்ட சொன்னான்.
நான் "இவர்களை நான் கேட்பேன். நீ ஸ்கூல் போகும் போது school ah எல்லாரும் உன்னை கிண்டல் செய்வார்களே? அப்ப என்ன செய்வே? " என்றேன். மறுநாளிலிருந்து அவன் diet start பண்ணினான்!
அவன் diet control பார்த்து இவனால எப்படி இப்படி இருக்க முடியுது னு எனக்கே பிரமிப்பா இருக்கு...
இப்போ CA ஆவேன் என்று சொல்லும் இவன், கண்டிப்பா இன்னும் நிறைய சாதிப்பான்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக