வெள்ளி, 3 ஜூலை, 2009

தாயுமானவர்


ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு பல அற்புத அனுபவங்கள் கிடைக்கும். இங்கு நான் நேசித்த அனுபவத்தை வாசிக்கிறேன்.
எனக்கு மலைக்கோட்டை தாயுமானவர் தான் உறவு, பகை எல்லாம். அவரோடு எனக்கு இருக்கும் உறவு....... முழுவதையும் வாசிக்க முடியதால் சிலவற்றை மட்டும் எழுதுகிறேன்
தாயாக

தாய்மை மிக உன்னதமானது. தன்னை முதியோர் இல்லத்தில் சேர்த்த பிள்ளைகளின் ஆசைகள் கூட நிறைவேற மனதார உருகுபவள் தாய்.
தாயுமானவரும் என்னை அப்படி தான் பார்த்து கொள்கிறார்.
நான் 12 படிக்கும் போது இரயிலில் வட இந்தியா போகணும் friends உடன் ஹாஸ்டலில் தங்கணும் என்று எல்லாம் ஆசை பட்டேன். இது எல்லாம் நான் கல்லூரியில் சேர்ந்ததும் எனக்கு கிடைத்தது. N.C.C. சேர்ந்தேன் பூரி (orissa), Gwalior (மத்தியப்ரதேசம்) எல்லாம் சுத்தினேன். போரில் சண்டை போடும் வாய்ப்பும் கிடைத்தது. Camp- ல் War demonstration- ல் நானும் பங்கேற்று அந்த ஆசையும் நிறைவேறியது

தந்தையாக
பிள்ளைகளுக்கு அறிவும் மட்டும் இல்லாது பல விசயங்களையும் கற்று தருபவர் தந்தை. எனக்கு அறிவு, தைரியம், பக்குவம் எல்லாம் வேண்டும் போது சரியாக கொடுப்பவர் என் தாயுமானவர்
சில நேரம் அசாத்திய மன தைரியம் வரும். அந்த தைரியத்தில் பல பிரச்சனைகள் ஓடி இருக்கிறது. என் அக்கா கல்யாணத்தின் போது எங்களிடம் ஒரு ரூபா கூட சேமிப்பு இல்லை. ஆனால் எனக்கும், அம்மாவுக்கும் இருந்த தைரியத்தில் யாரிடமும் அதிகமாக கடன் வாங்காமல் நல்ல முறையில் என் அக்காவின் திருமணமும் அதன் பின் தொடர்ந்து 1.5 வருடம் ஆடி, தீபாவளி, பொங்கல், வளைகாப்பு, என்று எல்லாம் நல்ல படியாக நடந்தது.

என் குருவாக
நான் யாருக்காது உதவி / உபத்திரம் செய்தால் அன்றோ அல்லது மறுநாளோ நா செய்தது வேறு ஒருவர் மூலமாக எனக்கு திரும்ப வருகிறது. இதனால் என்னிடம் யாரவது உதவி கேட்டல் முடிந்தவை செய்து விடுவேன் ஏனெனில் அது திரும்ப எனக்கு தானே வரும். அதே போல தான் கஷ்டங்களும்.......
அன்று பஸ்சில் ஒருவர் ரூ.5 கொடுத்து ரூ.3.50 ticket வாங்கினார். நடத்துனர் அவரிடம் '50 பைசா கொடுத்துவிட்டு ரூ.2 வங்கிக்கோ என்னிடம் சில்லறை இல்லை' என்றார். அவரிடம் சிலரை இல்லதல் நா 50 பைசா கொடுத்து பணம் வங்கிக்க சொல்லி நடத்துனரின் முறைப்பை பெற்றேன். 'உனக்கு நா எப்படி தருவேன்' என்றவரிடம் பெரிய மனதுடன்(!) 'பரவால்லை' என்றால்லும் உள்ளுக்குள் 'இந்த பைசா நாளைக்குள் எனக்கு வந்துவிடும்' என்று நினைத்தே கொடுத்தேன். ஆச்சரியம் மறுநாள் நான் டிக்கெட் எடுக்கும் போது நடத்துனர் எனக்கு ரூ.3 க்கு பதிலாக ரூ.2 டிக்கெட் கொடுக்க அதை மாற்றி கேட்க கூட அவகாசம் தராமல் அவர் நகர நா இறங்க வேண்டிய நிறுத்தமும் வர..........
இவரை போல நல்லது கேட்டதை சொல்லி தரும் குரு உலகில் வேறு எங்கு இருக்கிறார்.

அண்ணன்னாக
அண்ணன் என்பவன் தனது தம்பி தங்கைகளுக்கு இன்னொரு அப்பா. தங்கைளை பொறுப்புடன் பாதுகாக்கும் பாதுகாவலன்.
ஒரு நாள் நான் அலுவலகத்திற்கு போகும் போது இரவில் பெய்த மழையால் 20,30 அடி தூரம் ரோட்டில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி நின்றது. எதை எப்படி கடந்து போவது என்று யோசிக்கும் போது அங்கு ஒரு tractor வந்தது. அந்த tractor ஓட்டுனர் உதவிக்கு வந்தார் நானும் சரி என்று ஏறிக்கொண்டேன். 60 அடி தூரத்தில் தான் எங்கள் அலுவலகம் இருந்தது. அவர் என்னை அலுவலகத்துக்கு அருகில் இறக்கி விடுகிறேன் என்றார் நானும் சரி என்றேன் ஆனால் எங்கள் அலுவலகம் அருகில் வந்ததும் நான் வண்டியை நிறுத்த சொல்லியும் நிறுத்தாமல் போனார்.அப்போது அவர் முகமும் கொஞ்சம் மாறியது. எனக்கு ஒரு நிமிடம் பயம் வந்துவிட்டது. அப்போது என்றும் இல்லாத ஆச்சிரியமாக எங்க அலுவலகத்திற்கு அருகில் ஒரு police inspector நின்று கொண்டு இருந்தார். அந்த tractor காரர் திடீரென்று அங்கு வந்த police inspector பார்த்ததும் உடனே என்னை இறக்கி விட்டுட்டு (அந்த police inspector அருகில்!!!!!) இறக்கிவிட்டுட்டு திரும்பி பார்க்காமல் போனார்.

என் அக்காவாக
அண்ணன் பாதுகாவலன் என்றல் அக்கா உணர்வுகளை பகிர்ந்து கொள்ளும் நல்ல தோழி.
என் friends, சொந்தகார்கள், தெரிந்தவர்கள் என்று யார் நினைவாது திடீரென்று வரும். அவர்களை நினைத்து கொண்டு இருக்கும் போதே அன்றோ அல்லது மறுநாளோ அவர்கள் என் கண் முன் வந்து நிற்பார்கள். என் friend உஷா ஈரோட்டில் இருகிறாள். 2 நாட்களாக அவளது ஞாபகம் வந்து வந்து போனது. அன்று மாலை போன் பேச நினைத்தேன். ஆச்சரியம் அன்று மாலை அவளே எங்கள் வீட்டுக்கு வந்து எப்படி டி இருக்கே என்று கேட்கிறாள்?

தெய்வமாக
எனக்கு கஷ்டங்கள் வரும் பொது மலைக்கோட்டைக்கு போயீ தாயுமானவர் முன் நின்று அழுவேன். அப்போது அவரே வந்து எனக்கு ஆறுதல் சொல்லுவது போல என் மனம் உணரும். கொஞ்ச நேரம் / நாட்களில் அந்த கஷ்டமும் மறையும். பட்ட கஷ்டதுககு ஏற்ப மகிழ்ச்சியும் கிடைக்கும்.

தாயுமானவர் பற்றியும், அவர் பெருமக்களை பற்றியும் சொன்னால் அது ஒரு முடிவு இல்லாத அதிசயமாக தான் இருக்கும். என் இன்பமும் அவராலே, துன்பமும் அவராலே. அவர் இன்றி நான் இல்லை என்பதே உண்மை. ஓம் நாம சிவாய