திங்கள், 26 ஜூலை, 2010

சமயபுரத்தாள்

சிறு வயதிலிருந்து பல முறை சமயபுரம் சென்றிருந்தாலும் கடந்த இரண்டு மூன்று மாதங்களாக தான் அம்மன் மீது ஏதோ ஒரு ஈர்ப்பு.

சித்திரை தேரோட்டத்திற்கு முன் அம்மன் ஆதியில் குடிகொண்ட கண்ணனூரில் தங்கி இருப்பாள். அப்போது மிகவும் ஆக்ரோசமாக இருப்பாள் என்று சொல்வார்கள்
(அம்மாவாசை அன்று உட்கிரமகவும், பௌர்ணமி அன்று சாந்தமாகவும் இருப்பாள் என்றும் என் அம்மா சொன்னாங்க. அம்மாவாசையில் நான் இன்னும் பார்க்கலை)

மூன்று மாதங்களுக்கு முன் நாங்கள் சித்திரை தேரோட்டத்திற்கு இரண்டு நாள் முன் கண்ணனூர் சென்று அம்மனை வழிபட்டுட்டு சமயபுரம் வந்து பார்த்தோம்.



என்னால் நம்ப முடியவில்லை. அந்த அம்மனின் சிலையில் எப்போது இருக்கும் அலங்காரம் தான். ஆனால் அன்று நிஜமாலும் அவ்வளவு கோபமா உட்கிரமா அவள் தெரிந்தாள். என்னால் நம்பாமலும் இருக்க முடியலை. ஒருவேளை ரொம்ப நாள் கழித்து பார்ப்பதால் அப்படி தெரிகிறது போல என்று விட்டு விட்டேன்.

அம்மாவாசை, பௌர்ணமி அன்று கோவிலில் மக்கள் தங்குவர்.

பெரும்பாலும் சேலம், ஈரோடு மக்கள் கூட்டம் தான் அதிகம். எனக்கு விவரம் தெரிந்த போதே எங்கள் உறவினர்கள் எல்லாம் (சேலம், ஈரோடு தான் எங்க சொந்த ஊரு) சமயபுரம் வருடம் தவறாமல் கண்டிப்பா வந்து செல்வார்கள். மேலும் எந்த ஒரு நிறை,குறை இருந்தாலும் சமயபுரத்து அம்மனை நினைத்து ஒரு ரூபாய் மஞ்சள் துணியில் முடித்து வைத்து குறை தீர்ந்ததும் கோவிலுக்கு வந்து காணிக்கை செலுத்துவர்



போன பௌர்ணமி அன்று என் அம்மாவுடன் சமயபுரம் போனேன்.
என்னால் நிஜமாலும் ஆச்சரியம் படாமல் இருக்க முடியலை.
போன முறை அவ்வளவு கோபமா உட்கிரமா இருந்த அம்மன் பௌர்ணமி அன்று அவ்வளவு சந்தமா அழகா.... பார்த்ததிலிருந்து மனது முழுக்க நிறைந்து இருந்தாள்.

நேற்று(பௌர்ணமி) நானே என் அம்மாவை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு போனேன். போன பௌர்ணமி அன்று பார்த்தா அதே சாந்தமான முகம்.

சிறிது நேரம் அங்கே உட்கார்ந்து அவளின் மடியில் நான் ஒரு குழந்தையாக இருந்தேன். அவள் என் தலை வருடி கொடுத்தாள். எவ்வளவு சந்தோசமாக இருக்கிறது. அந்த அரவணைப்பில் மனதில் இருந்த பயம், கோபம், குழப்பம், எல்லாம் போயேவிட்டது. மனதில் ஒரு அமைதி, சந்தோஷம், ஒரு நிறைவு ....
இது ஒரு கற்பனை என்றாலும் உண்மை என்றே உணருகிறேன். அந்த தாய்மை சுகத்தை அனுபவிக்கிறேன்.

அவளிடம் ஒரு வேண்டுதல் வைத்துவிட்டு தான் வந்தேன்
நாங்கள் முன் பிறவி, இப்பிறவியில் செய்த பாவங்களுக்காகவும்,முட்டாள்தனத்திர்க்காகவும் எங்கள் முன்னோர்கள் சேர்த்து வைத்த பாவங்களுக்காகவும் பல கஷ்டங்கள் அனுபவித்தே ஆக வேண்டி இருக்கிறது. இப்படி கஷ்டங்கள் அனுபவிக்கும் நேரத்தில் மனது துவண்டு, அழுது, தாங்க முடிய துயத்தில் இருக்கும் போதெல்லாம் நீ இதே போலவே என்னை உன் மடியில் குழந்தையாக வைத்து வருடி கொடுக்க வேண்டும்

மனதில் அமைதியும், நிறைவும், இருந்தால் என்ன கஷ்டம் வந்தால் என்ன?
இரண்டில் ஒன்று பார்த்து விட மாட்டோமா?