வியாழன், 13 ஆகஸ்ட், 2009

எதற்கு இந்த தலைப்புக்கள்?

தேர்தல் சமயத்தில் அரசியல்வாதிகள் ஓட்டு வாங்க இல்லாத சேட்டை செய்வார்கள். இந்த பதிவுலகத்திற்கு திடீரென்று என்ன வந்துவிட்டது? ஆளாளுக்கு ஆன்மிகம், சமயம்,சம்பிரதாயம், கடவுள் என்ற ஒரு உணர்வு பூரணமான தலைப்பை எடுத்துக்கொண்டு விவாதிக்கிறார்கள்?

ஆன்மீகத்தில் இருப்பவர்கள் தங்கள் வாழ்வில் பல அற்புத அனுபவங்களை உணர்ந்து இருப்பார்கள். ஆதலால்தான் கடவுள் இல்லை என்றும், அவரை கேலியாக பேச ஆரம்பித்தால் எங்களால் தாங்க முடியாமல் துள்ளி குதித்து பேச ஆரம்பிப்போம்.

ஆன்மீகவாதிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கடவுளை வாங்குவர், சிவன், சக்தி, பெருமாள், பிள்ளையார், முருகர், etc

நான் சிவ பெருமானை முழுதாக நம்புபவள். ஈசனை வணங்குவோர்க்கு கிடைக்கும் ஒரு அற்புத சக்தி உள்ளுணர்வு அதாவது ஒரு செயல் நடப்பதற்கு முன்னரே இது சரியாக நடக்கும், இது தவறாக நடக்கும் என்றும், ஏதோ ஒரு நல்லது /கெட்டது நடந்துள்ளது, நடக்க இருக்கிறது என்பது மனது கூறும். இதனை உள்ளுணர்வு / Intuition என்பர்.

பொதுவாக யோகா செய்பவர்க்கும், எதையும் ஆழ்ந்து தெளிவாக நடைமுறைக்கு ஏற்ப முடிவெடுப்பவருக்கும் இந்த உள்ளுணர்வு ஓரளவு இருக்கும். ஆனால் சிவ பெருமானை வணங்கும் பெரும்பாலனவர்க்கு இந்த அபூர்வ உள்ளுணர்வு எளிதாக கிடைக்கிறது.
நடக்கும் நடக்காது என்பதை ஓரளவு எங்களுக்கு முன்னரே தெரிந்து விடுவதால் முடிவுகள் எப்படி இருந்தாலும், அல்லது எது எப்படி நடந்தாலும் தைரியத்துடன் எதிர்கொள்ள முடிகிறது.
மேலும் அதனை நல்ல முறையில் பயன்படுத்தும் வரை உள்ளுணர்வு நம்மிடமே இருக்கும்

என் தோழி மகேஸ்வரி. அவர் சிவ பெருமான் மீது அதீத பக்தியோடு இருப்பவள். அவள் வசிப்பது ஒரு பக்க பட்டிகாடு. அவள் அப்பா சிவன் கோவில் பூசாரி.
ஒருமுறை செமெஸ்டர் (Accountancy paper)எக்ஸாம் போது அவள் என்னிடம் Exam Hall போவதற்கு 15 நிமிடத்திற்கு முன் ஒரு 12 மார்க்ஸ் கேள்வியை காண்பித்து இதை படி என்றால். நானும் படித்தேன். அதிசயம் அந்த கேள்வி எக்ஸாம்ல் வந்து. அந்த பரிச்சையில் நா எடுத்த மதிப்பேன் 42! (pass marks is 40). அவளிடம் எப்படி உனக்கு இது தெரியும் என்றால் அவள் சொன்ன ஒரே பதில் உள்ளுணர்வு. Avarage மாணவியாக இருந்தவள் இன்று CA முடித்து ஆடிடோர்-ஆக இருக்கிறாள். இதற்கு அவள் சொல்லுவது 'எல்லாம் அவன் செயல்'. இது போல என் வாழ்க்கையிலும் பல பல அனுபவங்கள் இருக்கு. ஒவ்வொரு ஆன்மீகவாதிகள் வாழ்க்கையிலும் பல பல அதிசயங்கள் நடந்து இருக்கு.

இந்த உணர்வில் லயித்தவர்கள் சிலர் வெளியில் வர விருப்பம் இல்லாமல் அந்த அதிசயத்தில் கலந்து விடுவர். அதாவது சிவ சித்தராகி விடுவர். (நாத்திகர் பாசையில் பைத்தியங்கள்)

ஆனால் இது எதுவுமே நடக்காத/உணராத நாத்திகவாதிகள் இறைவன் இல்லை. அவன் கல், காளான் என்று எல்லாம் பேசுகிறார்கள்!!!!! ??????

நாத்திகவாதிகளுக்கு கடவுள் இல்லை என்று சொல்வதிலும், எங்களுடன் விவாதம் என்ற பெயரில் எல்லாம் தெரிந்தவர்கள் போல பேசுவதிலும் ஒரு சந்தோசம்.

மேலும் வால் பையனின் விவாதத்தில் கலந்து கொண்டதிலிருந்து நா தெரிந்து கொண்டவை,

1. இறை உணர்வை உணர்ந்து கொள்ளும் பக்குவம் இன்னும் இவர்களுக்கு வரவில்லை. (அப்படி விளக்க போனால் அது விவாதமாகி எனது அன்றைய நாள் வேலைகளும், படிப்பும் கேட்டு போகிறது)

2. அப்படியென்றால் கடவுள், ஆன்மீக போன்றவற்றை எப்படி இவர்களுக்கு தெரியவைப்பது என்றால்

ஒவ்வொருவரும் ஒவ்வொரு சூழ்நிலையில்தான் கடவுளை உணர்ந்து இருக்கிறார்கள். இவர்களுக்கும் அது போல சூழ்நிலை வரும். அப்போது அவர்களே அதை தெரிந்து கொள்வர்.
அதுவரை அவர்களை பொறுத்தவரை நான் (ஆன்மீகவாதி) பைத்தியமாகவே இருந்துவிட்டு போறேன்.

என் பதிவுலக நண்பர்களே இனி யாரும் என்னை ஆன்மிகம் சார்ந்த விவாதத்திருக்கு அழைக்க வேண்டாம்.