புதன், 14 அக்டோபர், 2009

Bonus பிரச்சனை

1. சாக்கடையை சுத்தம் செய்யும் தொழிலாளி சாக்கடை மீதிருக்கும் கல்லை எடுத்துவிட்டு பின் அவர்க்கு சன்மானம் தரும் கடை/வீடு முன் இருக்கும் கல்லையும், சாக்கடை கழிவுகளை மட்டும் சரி செய்கிறார்.

2. கேட்ட பணம் தருபவர்க்கே தன் கடமையை செய்கிறார் மின்வாரிய ஊழியர்கள்

3. பாஸ்போர்ட், பென்ஷன், போன்றவைகளை தகுந்த சன்மானம் பெற்றுக்கொண்டே உரியவர்களிடம் கொடுகின்றனர் அஞ்சலக ஊழியர்கள்

4. 'கொள்முதல் கணக்கை குறிப்பிட்ட தேதியில் சமர்பிக்காவிட்டால் அதிக பணம் கட்டவேண்டி வரும்' என்ற நோட்டீஸ்-யை கொடுத்துவிட்டு அதை கொண்டுவந்ததற்காக பணம் கேட்டு தலை சொரிகிறார் விற்பனை வரி அலுவலக(sales tax office staff) ஊழியர்கள்

5. எந்த சான்றிதழுக்கும் பணத்தை பெற்றுக் கொண்டே தன் கடமையை செய்கிறார் Commercial Tax Officer.

6. கார்ப்பரேஷன் வரி நோட்டீஸ் கொடுக்க வரும் ஊழியர்

7. Traffic signal-லில் நின்று கொண்டு அநியாயமாக பணம் கறக்கும் போக்குவரத்து காவலர்கள்

இவர்களை போல் இன்னும் பலர்.

இப்படி பணத்தை பெற்று கொண்டே வேலை செய்யும் இந்த அரசாங்க பிட்சைக்காரர்கள் தீபாவளிக்கு உரிமையுடன் ஒவ்வொரு வீடு மற்றும் கடைகளுக்கு வந்து பண்டிகை பணம் கேட்கிறார்கள்.
இவர்களுக்கு பயந்து கொண்டே தீபாவளிக்கு இரண்டு நாள் கூடுதலாக விடுமுறை கொடுக்கின்றனர் பல வியாபாரிகள்.

இவர்களுக்கு பணம் கொடுப்பது சரியா?
இவர்களை எப்படி சமாளிப்பது?

ஒருமுறை ஒருவரிடம் அல்லது நான்கு பேரிடம் கூட 'பணம் கொடுக்க முடியாது' என்று சொல்லலாம். தொடர்ந்து வெட்கமில்லாமல் படையெடுக்கும் இவர்களை சமாளிப்பதை பற்றி யாருக்காவது தெரிந்தால் எங்களுக்கும் சொல்லி உதவுங்களேன்.