சனி, 1 ஆகஸ்ட், 2009

நம் கலாச்சாரம் ஒரு நாளும் அழியாது

18.07.09 அன்று நானும் என் அம்மாவும் என் அக்கா வீட்டிற்க்கு (ஈரோடு) சென்றோம். பிறகு அங்கிருந்து கர்நாடக எல்லையில் இருக்கும் மாதேஸ்வரன் மலைக்கு சென்றோம். மிகவும் அற்புதமான இயற்கை சூழலில் இருக்கும் அந்த மலை கோவிலுக்கு எங்க ஊர்காரர்கள் (ராசிபுரம், சேலம், ஈரோடு) பல காலமாக (கிட்ட தட்ட 60,70 வருடங்களாக) வருடம் தவறாமல் போயி வருகிறார்கள். என் அக்காவின் மாமனார், மாமியார், என் அம்மா என அனைவரும் அவர்கள் சிறு வயதில் அவர்களின் தாத்தா, பாட்டியுடன் நடந்தே அந்த காட்டு மலை பாதையில் கோவிலுக்கு போயி இருக்கிறார்கள். ஒரு வார பயணமாக இருக்குமாம். இடையில் சிங்கம், புலி வந்தால் 'மாதையா காப்பாத்து , மாதையா காப்பாத்து' ன்னு கத்துவாங்கலாம். இவர்கள் கத்தலை கேட்டு (சகிக்கமலோ என்னவோ!!!) புலி, சிங்கம் எல்லாம் ஓடிடுமாம். (அப்புறமா தான் தைரியமா நம்ப வீரப்பன் அண்ணன் வந்தாங்க) சக்தி வாய்ந்த அந்த தெய்வத்தை தரிசித்துவிட்டு திரும்பும்போது மேட்டூர் போனோம்.

அங்கு நம் ஊர் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கண்கூடாக பார்த்தேன்.. அன்று ஞாயிற்று கிழமை ஆதலால் ஊர்க்காரர்கள் எல்லாம் அரிசி, மளிகை பொருட்களை எடுத்து வந்து அங்கேயே மீன் வாங்கி குழம்பு வச்சு சமைத்து அந்த இடத்தையே நார வச்சு இருந்தார்கள். (வாரம் வாரம் இவர்கள் செய்யும் இந்த அட்டகாசத்தையும் தாண்டி பூங்காவை நன்றாக பராமரித்து வரும் பணியாளர்களுக்கு பாராட்டுகள்). அடுத்து அங்கு இருக்கும் உயிரியல் பூங்கா (zoo) வில் இருக்கும் பாம்பை பார்த்து பக்தியோடு இவர்கள் போட்ட காணிக்கை பார்த்து எனக்கு சிரிப்பு தான் வருது. அதுவும் சதா பாம்புக்கு காசாகவும், மலைப் பாம்புக்கு ரூபாய் நோட்டுக்கலாகவும் போட்ட இவர்களது பக்தியை என்ன வென்று சொல்லுவது???


இதெல்லாம் பார்த்த பிறகு நம் நாட்டு பண்பாடு கலாச்சாரம் கேட்டு போச்சு ன்னு சொன்னவங்க மேல கோபம் கோபமா வந்துச்சு. இப்படி பட்ட மனுசங்க இருக்கிற வரை நம் கலாச்சாரம் ஒரு நாளும் அழியாது.