திங்கள், 17 ஆகஸ்ட், 2009

இயற்கையை பாதுகாப்போமா?

நாம் இன்று இருக்கும் சூழ்நிலையில் மரம் வெட்டுவது குற்றம், மணல் அள்ளுவது குற்றம் என்று எல்லாம் பேசுகிறோம். இவற்றை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் மரம் வெட்டுபவரையும், மணல் அள்ளுபவரையுமே குற்றம் சொல்லுவதும் குற்றம்.

ஏனெனில் மரம் வெட்டுபவரோ, மணல் அள்ளுபவரோ, அல்லது அவற்றை விற்பவர்களோ அவற்றை எல்லாம் தங்கள் சொந்த உபயோகத்திருக்கே பயன் படுத்துவது இல்லை. இந்த திருட்டு மணலும், மரமும் எங்கு போகின்றன? கடைசியாக தனி மனித விருப்பத்திற்கே வந்தடைகிறது.

இப்பல்லாம் எல்லாரும் தனி வீடு, அதுவும் மாளிகை போல வீடு கட்டி அதில் வசிக்கவே ஆசைபடுகின்றனர். உங்கள் அனைவருக்கும் தெரியும். மணலோ, மரமோ இல்லாமல் வீடு கட்ட முடியாது. அதே போல மரத்திற்கு பதிலாக எத்தனையோ மாற்று பொருள்கள் வந்தாலும் மர பொருட்களையே(கட்டில், டேபிள், etc..) மனிதன் விரும்பிகிறான்.

மரம், மணல் பற்றிய குற்றம் குறைய வேண்டுமானால் முதலில் இந்த தனி மனித குணம் மாற வேண்டும்.

1. எளிய வீட்டில் வசிக்க அனைவரும் முன்வர வேண்டும்.

2. மரப் பொருட்களை பயன் படுத்துவடை தவிர்க்க வேண்டும்.

இதை ஒவ்வருவரும் பின் பற்றினால் மணலும், மரமும் வாங்க ஆள் இல்லாமல் அவைகள் அந்த அந்த இடங்களிலே மகிழ்ச்சியாக இருக்கும்.

ஆனால் இது ஒருநாளும் நடக்காத செயல். சிறிது சிறிதாக பணம் சேர்த்து பெரிய வீடு கட்டும் ஒருவரிடம் உங்களால் தான் மரம், மண் வளம் பாத்திப்படைகிறது என்றால் அருவாள் தூக்கி கொண்டு வெட்ட வருவான்.

மேலும் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப கூட்டு குடும்ப முறை மாற்றமும், சொந்த வீடு கனவும் பெருகுகிறது. இதை மாற்றுவது என்பது அவ்வளவு எளிதல்ல.

என்னால் முடிந்தது என் கொள்கைகளின் பட்டியலில் மேற்சொன்னவற்றை சேர்த்து கொண்டது தான். (அதாவது எளிமையே இனிமை) என் வாழ்க்கை துணையும் இதேபோல இருந்தால் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.