திங்கள், 17 ஆகஸ்ட், 2009

இயற்கையை பாதுகாப்போமா?

நாம் இன்று இருக்கும் சூழ்நிலையில் மரம் வெட்டுவது குற்றம், மணல் அள்ளுவது குற்றம் என்று எல்லாம் பேசுகிறோம். இவற்றை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் மரம் வெட்டுபவரையும், மணல் அள்ளுபவரையுமே குற்றம் சொல்லுவதும் குற்றம்.

ஏனெனில் மரம் வெட்டுபவரோ, மணல் அள்ளுபவரோ, அல்லது அவற்றை விற்பவர்களோ அவற்றை எல்லாம் தங்கள் சொந்த உபயோகத்திருக்கே பயன் படுத்துவது இல்லை. இந்த திருட்டு மணலும், மரமும் எங்கு போகின்றன? கடைசியாக தனி மனித விருப்பத்திற்கே வந்தடைகிறது.

இப்பல்லாம் எல்லாரும் தனி வீடு, அதுவும் மாளிகை போல வீடு கட்டி அதில் வசிக்கவே ஆசைபடுகின்றனர். உங்கள் அனைவருக்கும் தெரியும். மணலோ, மரமோ இல்லாமல் வீடு கட்ட முடியாது. அதே போல மரத்திற்கு பதிலாக எத்தனையோ மாற்று பொருள்கள் வந்தாலும் மர பொருட்களையே(கட்டில், டேபிள், etc..) மனிதன் விரும்பிகிறான்.

மரம், மணல் பற்றிய குற்றம் குறைய வேண்டுமானால் முதலில் இந்த தனி மனித குணம் மாற வேண்டும்.

1. எளிய வீட்டில் வசிக்க அனைவரும் முன்வர வேண்டும்.

2. மரப் பொருட்களை பயன் படுத்துவடை தவிர்க்க வேண்டும்.

இதை ஒவ்வருவரும் பின் பற்றினால் மணலும், மரமும் வாங்க ஆள் இல்லாமல் அவைகள் அந்த அந்த இடங்களிலே மகிழ்ச்சியாக இருக்கும்.

ஆனால் இது ஒருநாளும் நடக்காத செயல். சிறிது சிறிதாக பணம் சேர்த்து பெரிய வீடு கட்டும் ஒருவரிடம் உங்களால் தான் மரம், மண் வளம் பாத்திப்படைகிறது என்றால் அருவாள் தூக்கி கொண்டு வெட்ட வருவான்.

மேலும் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப கூட்டு குடும்ப முறை மாற்றமும், சொந்த வீடு கனவும் பெருகுகிறது. இதை மாற்றுவது என்பது அவ்வளவு எளிதல்ல.

என்னால் முடிந்தது என் கொள்கைகளின் பட்டியலில் மேற்சொன்னவற்றை சேர்த்து கொண்டது தான். (அதாவது எளிமையே இனிமை) என் வாழ்க்கை துணையும் இதேபோல இருந்தால் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

21 கருத்துகள்:

 1. //மரம் வெட்டுபவரையும், மணல் அள்ளுபவரையுமே குற்றம் சொல்லுவதும் குற்றம். //

  ஆர‌ம்ப‌மே பொறி ப‌ற‌க்குதே ஈஸ்வ‌ரி....

  //இப்பல்லாம் எல்லாரும் தனி வீடு, அதுவும் மாளிகை போல வீடு கட்டி அதில் வசிக்கவே ஆசைபடுகின்றனர்.//

  எல்லாருமே இப்ப‌டி ஆசைப்ப‌ட‌ற‌வ‌ங்க‌ இல்லைங்க‌ ஈஸ்வ‌ரி....

  //மரத்திற்கு பதிலாக எத்தனையோ மாற்று பொருள்கள் வந்தாலும் மர பொருட்களையே(கட்டில், டேபிள், etc..) மனிதன் விரும்பிகிறான். //

  முன்னாடி அப்ப‌டி ஓகே... இப்போதான் ஸ்டீல் க‌ட்டில் வந்துடுத்தே... டேபிள் கூட‌ நிறைய‌ ப்ளாஸ்டிக்ல‌ வந்துடுத்து.... இது அத‌விட‌ டேஞ்ச‌ர்....

  //சிறிது சிறிதாக பணம் சேர்த்து பெரிய வீடு கட்டும் ஒருவரிடம் உங்களால் தான் மரம், மண் வளம் பாத்திப்படைகிறது என்றால் அருவாள் தூக்கி கொண்டு வெட்ட வருவான். //

  ச‌ரியாதான் சொல்லி இருக்கீங்க‌.... இப்போல்லாம், அட்வைஸ் ப‌ண்ணினா யாருக்கு பிடிக்க‌ற‌து சொல்லுங்க‌....

  //பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப கூட்டு குடும்ப முறை மாற்றமும், சொந்த வீடு கனவும் பெருகுகிறது. இதை மாற்றுவது என்பது அவ்வளவு எளிதல்ல. //

  இனிமேல் கூட்டு குடும்ப‌த்தை சினிமாவில் கூட‌ பார்க்க‌ முடியாது போலிருக்கிற‌து... அது போன்ற‌ கூட்டு குடும்ப‌த்தை மைய‌மாக‌ வைத்து சினிமா எடுத்த‌ விக்ர‌ம‌ன், விசு வி.சேக‌ர் போன்றோர் இப்போது ப‌டமே எடுப்ப‌தில்லை ஈஸ்வ‌ரி...

  //(அதாவது எளிமையே இனிமை) என் வாழ்க்கை துணையும் இதேபோல இருந்தால் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. //

  எளிமையே இனிமை...ஒரு வாசகம் சொன்னாலும் திருவாச‌க‌ம்... த‌ங்க‌ளின் விருப்ப‌ப்ப‌டியே த‌ங்க‌ளின் வாழ்க்கைத்துணை அமைய‌ எல்லாம் வ‌ல்ல‌ இறைவ‌னிட‌ம் நான் வேண்டுகிறேன்...

  இந்த‌ கால‌த்துல‌ உங்க‌ள‌ மாதிரி ஒருத்த‌ர‌ பாக்க‌ற‌தே அதிச‌ய‌ம்தான் ஈஸ்வ‌ரி...

  வாழ்த்துக்க‌ள்....தொட‌ர்ந்து சிந்த‌னையை தூண்டும் ந‌ல்ல‌ ப‌திவுகளையே ப‌திவ‌த‌ற்கு..

  பதிலளிநீக்கு
 2. மரம் வளர்புகுண்டான சரியான விழிப்புணர்வு இந்தியாவில் இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது!

  மரம் என்பது எந்த அளவு மனித வாழ்வுக்கு முக்கியம் என விஞ்ஞானிகள் கத்தி கொண்டு தான் இருக்கிறார்கள்! ஆனால் மனிதனோ தன் அமர்ந்திருக்கும் கிளையையே வெட்டுவது போல் இயற்கையை அழித்து தற்கொலைக்கு முயல்கிறான்!

  பதிலளிநீக்கு
 3. நா அப்படித் தான்னு சொல்லிட்டு இப்படி எழுதி இருக்கீங்க..... இயற்கை மீதான உங்கள் காதலும், அதை காதல் கொள்ள மற்றவர்களை தூண்டிய விதமும் அருமை....

  முதல் வருகை.... வாழ்த்துக்கள்.....

  அப்படியே என் வலைப் பக்கமும் வந்து பாருங்க.....

  பதிலளிநீக்கு
 4. ந‌ல்ல‌ பதிவு. ஆனால் எவ்வளவு தூரம் இதை செயல் படுத்தமுடியும் என்று தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
 5. நல்ல கட்டுரை. அதிகம் இல்லை ஆனால் அசத்தலாக இருக்கிறது.

  இதைப் படிக்கும் பொழுது எனக்குள் கேள்வி எழுந்தது.

  1. மரம் வெட்டுகிற அளவுக்கு வளர்க்கப் பட்டால், மரம் வெட்டலாம் தானே?
  2.மரப் பொருட்களுக்குப் பதிலாக பயன்படுத்தப் படும் ப்ளாஸ்டிக் பொருட்களும் ஆரோக்கியமில்லை தானே?

  எளிமையாக வாழ வேண்டும் என்று நினைப்பது மிகவும் நல்ல குணம். எனக்கு அது பிடித்திருக்கிறது.

  கேள்வி கேட்பதால் எனக்கு உங்கள் கருத்தில் உடன்பாடு இல்லை என்று அர்த்தமில்லை. எனக்கு உங்களோடு 100% உடன்பாடு உண்டு. ஆனால் இந்த இரண்டு கேள்வியும் நாம் யோசித்துத் தான் ஆகவேண்டும்.

  பதிலளிநீக்கு
 6. @ R.Gopi
  ///இப்பல்லாம் எல்லாரும் தனி வீடு, அதுவும் மாளிகை போல வீடு கட்டி அதில் வசிக்கவே ஆசைபடுகின்றனர்.//

  எல்லாருமே இப்ப‌டி ஆசைப்ப‌ட‌ற‌வ‌ங்க‌ இல்லைங்க‌ ஈஸ்வ‌ரி....//
  பெரும்பாலும் யாரும் தேவைக்கேற்ப வீடு கட்டுவது இல்லை. வசதிக்கு ஏற்பவே கட்டுகிறார்கள். புது வீடு கட்டியவர்களிடம் பேசினால் தெரியும் 'ஏதோ எங்கள் வசதிக்கு ஏற்ப கட்டி இருக்கோம்' என்பர்.
  @ R.Gopi & shri ramesh sadasivam

  //முன்னாடி அப்ப‌டி ஓகே... இப்போதான் ஸ்டீல் க‌ட்டில் வந்துடுத்தே... டேபிள் கூட‌ நிறைய‌ ப்ளாஸ்டிக்ல‌ வந்துடுத்து.... //

  //மரப் பொருட்களுக்குப் பதிலாக பயன்படுத்தப் படும் ப்ளாஸ்டிக் பொருட்களும் ஆரோக்கியமில்லை தானே?//


  மாற்று பொருள் வந்து இருப்பதையும், அதை மக்கள் அதிகமா பயன் படுத்துவதையும், நா மறுக்கவும் இல்லை, குறை சொல்லவும் இல்லை. ஆனால் நல்லா மரங்களில் செய்யும், கட்டில், டேபிள்,ரேக் போன்றவற்றின் தன்மையும், அழகும், பயன்பாடும் மற்றவற்றில் குறைவாகவே இருப்பதால் இவற்றிற்கு இன்னும் தேவை இருப்பது மறுக்க முடியாதது. இவற்றின் விலை அதிகமாக இருப்பதால் பெரும்பாலும் வசதிபடைத்தவர்களே விரும்புகின்றனர்/பயன்படுத்துகின்றனர்

  பதிலளிநீக்கு
 7. @ R.Gopi
  எளிமை என்பது பெண்களின் குறிப்பாக கிராமப்புற பெண்களில் இயல்பான குணம். அரபு நாடுகளை பற்றி இப்படி அலசுரிங்க நம்ப நாட்டு பெண்களை பத்தி தெரியலையே?

  @ சப்ராஸ் அபூ பக்கர்
  //நா அப்படித் தான்னு சொல்லிட்டு இப்படி எழுதி இருக்கீங்க....//

  எனக்கு கோபமும், திமிரும், பிடிவாதமும் அதிகம். நா அதிகம் பயன்படுத்தும் வார்த்தை இது. 'நா அப்படி தான் பண்ணுவேன், நா அப்படி தான் பேசுவேன், நா அப்படி தான் இருப்பேன்'.
  ஆனால் அதுக்கும் இயற்கையை நேசிப்பதற்கும் சம்பந்தம் இல்லை அல்லவா?

  @பின்னோக்கி
  உண்மை தான் பின்னோக்கி

  @shri ramesh sadasivam
  //1. மரம் வெட்டுகிற அளவுக்கு வளர்க்கப் பட்டால், மரம் வெட்டலாம் தானே?//
  ஆம்

  உங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி சப்ராஸ் அபூ பக்கர், பின்னோக்கி

  பதிலளிநீக்கு
 8. கட்டடங்கள் கட்டுவதற்கும் furniture க்கும் மர பொருட்களே அதிகம் பயன் உள்ளவையாக இருக்கின்றன. இதற்கு மற்று பொருள் (ஸ்டீல், பிளாஸ்டிக்...) உபயோகித்தாலும் அவை மரத்திற்கு ஈடு இல்லை என்றாலும் அதன் ஆபத்துகளும் அதிகமே.
  ஒவ்வொருவரும் தனக்கு தெரிந்தோ தெரியாமலோ இயற்கை வளங்களை பயன் படுத்துகிறார்கள்.
  அனைவரும் எளிமையை விரும்பினால் அன்றி இயற்கையை பாதுகாப்பது முடியாத காரியம்.

  உங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி வால்பையன்

  பதிலளிநீக்கு
 9. //எனக்கு கோபமும், திமிரும், பிடிவாதமும் அதிகம். நா அதிகம் பயன்படுத்தும் வார்த்தை இது. 'நா அப்படி தான் பண்ணுவேன், நா அப்படி தான் பேசுவேன், நா அப்படி தான் இருப்பேன்'. .//

  கொஞ்ச‌ம் மாத்திக்க‌ முய‌ற்சி பண்ணுங்க‌ ஈஸ்வ‌ரி.......

  வாழ்த்துக்க‌ள்....

  பதிலளிநீக்கு
 10. //கொஞ்ச‌ம் மாத்திக்க‌ முய‌ற்சி பண்ணுங்க‌ ஈஸ்வ‌ரி.......//

  முயற்சி செய்கிறேன் கோபி

  பதிலளிநீக்கு
 11. ஆத்தா ஈஸ்வரி! ஈஸ்வரி ஆத்தா!

  நெசமாவே முயற்சி பண்ணுங்க! வால்பையனோட ஆன்மீகப் பயணத்தில் நீங்க போட்ட ஒரு பின்னூட்டம் "போடா லூசு...." அதோட பின்விளைவா என்ன ஆச்சு?

  ஒரு கொலைவெறியோட வால் பையன் தன்னுடைய பதிவுகளில் கவுஜ, அப்புறம் ஆன்மீகப் பயணத்திற்கொரு எதிர்வினை பாகம் பாகம் ஒண்ணு. பாகம் ரெண்டுன்னு ஹாரி[பில்] பாட்டர் படம் எடுக்குற கணக்கா ஆரம்பிச்சு நேத்திக்குத் தான் கொஞ்சம் நிதானத்துக்கு வந்திருக்காரு!

  விளையாட்டு ஒருபுறமிருக்க, நான் அப்படித்தான் என்ற எண்ணம் வரும்போதெல்லாம் எப்படித்தான், ஏன் அப்படித்தான் என்பதைக் கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தாலே, பூசாரி, வேப்பிலை எதுவுமே இல்லாமல், சாமி தானாகவே ஆட்டத்தை நிறுத்திவிடும்:-))

  பதிலளிநீக்கு
 12. "போடா லூசு...." ன்னு சொன்னது டம்பி மேவி என்னும் மேதாவியை. அவரை அப்படி சொன்னது தப்பு ன்னு எனக்கு இன்னும் தோணலை.

  வருகைக்கும் பின்னோட்டத்திற்கும் நன்றி கிருஷ்ணமூர்த்தி.

  வருகைக்கும் பின்னோட்டத்திற்கும் நன்றி Earn Staying Home

  பதிலளிநீக்கு
 13. //"போடா லூசு...." ன்னு சொன்னது டம்பி மேவி என்னும் மேதாவியை. அவரை அப்படி சொன்னது தப்பு ன்னு எனக்கு இன்னும் தோணலை. //


  ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்!?

  பதிலளிநீக்கு
 14. மனிதர்களை கடவுள் தான் படைத்தார் என்றால் ஏன் மேவீ சோனது போல் கேனையாக படைக்க வேண்டும்! எல்லோரும் கடவுள் நம்பிக்கையுடன் படைத்திருக்கலாமே!? அல்லது தவறுகள் நடக்காமல் பார்த்து கொள்ளலாமே!

  கடவுள் என்ற பெயரால் நாட்டில் எவ்வளவு பணம் கை மாறுகிறது தெரியுமா?! கடவுள் இல்லையென்றால் நிறைய பேர் சோத்துக்கே லாட்டரி தான் அடிக்கனும்!

  பதிலளிநீக்கு
 15. அவரை லூசுன்னு சொன்னதால அவர் சந்தோசமா இருக்கிறது என்னவோ உண்மை தான்!
  ஆனால் நீங்கள் அவரது கருத்தை தானே குறை சொல்ல வேண்டும்! அவரை போல் நீங்களும் பேசினால் அவருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்!?

  பதிலளிநீக்கு
 16. கடவுளையும் எங்களையும் ஆயிரம் வார்த்தைகளால் காயபடுத்தியவரை இரண்டு வார்த்தைகள் தானே சொன்னேன்?
  உங்களுக்கு இப்ப வலிப்பது போல தான் எங்களுக்கும் இருக்கும் மேவி sory
  வால்ஸ்

  பதிலளிநீக்கு
 17. ஸாரியெல்லாம் எதுக்கு!
  மேவி இப்போ தான் சந்தோசமா இருக்கார்!
  சிரிப்பு தாங்கமுடியல அவருக்கு!

  பதிலளிநீக்கு
 18. கொஞ்ச நாளைக்கு முன்னால இங்க ஒருத்தர் தன்னுடைய வலை பதிவின் முகப்பில் "லூசாப்பா நீயி?" என்று அவர் மகள் கேட்பதைப் பெருமிதமாக வச்சிருந்தார்னு நினைவு.

  நம்ம வால்பையன் சொல்றதைப் பாத்தா லூசுப்பட்டம் வாங்கரதுல நிறையப்பேருக்கு உலகமகா டாக்டர் வாங்கிட்ட மாதிரி சந்தோசம், ஒரே சிரிப்புல இருக்குற மாதிரி தெரியுது!

  அதெல்லாம் வேற! ஆத்தா ஈஸ்வரி!
  வாதம் பண்ணும்போது, பதில் வாதம்தான் பண்ணனும்! பிடிவாத, பிடிசாபம், லூசுப்பட்டம்லாம் கொடுக்கக் கூடாது!

  பதிலளிநீக்கு
 19. Hello idlyvadai readers,

  Here is the link for removed post...

  http://www.scribd.com/doc/18934353/Idlyvadai-Removed-Post-about-Jayalalitha

  பதிலளிநீக்கு