வெள்ளி, 27 நவம்பர், 2009

எங்கள் குட்டி தேவதை



இந்த பாடல் கேட்கும் போது எங்கள் சுபிக்ஷா பாப்பாவின் நினைவு வரும்.
சுபிக்ஷா என் அக்காவின் குழந்தை
அவளுக்கு ஒன்றரை வயது இருக்கும் போது என் அக்கா அவளுக்கு இந்த பாடல் சொல்லி தந்தாள். அப்போது அவள் பட்ட பாடு இப்போது நினைத்தாலும் எங்களுக்கு சிரிப்பும், சந்தோசமும் தான் வருகிறது.

அக்கா: அம்மா இங்கே வா வா
பாப்பா: அம்மா தான் இங்க இருக்கீங்க. இன்னொரு அம்மாவை கூப்பிடணுமா?
அக்கா இந்த வரியிலே அதிர்ச்சி ஆகிட்டாள். பின் விளக்கம் சொல்லி கொடுத்து அடுத்த வரிக்கு வந்தாள்

அக்கா: ஆசை முத்தம் தா தா
பாப்பா: நிஜமாலும் முத்தம் கொடுத்தாள்

அக்கா: இலையில் சோறு போட்டு
பாப்பா: நிஜமாலும் போட போகிறார்கள் என்று நினைத்து எனக்கு சோறு வேண்டாம் வேண்டாம் ன்னு ஒரே சிணுங்கள்

அக்கா: ஈ யை தூர ஓட்டு
பாப்பா: எங்க மா ஈ ? இங்கே காட்டு. என் கண்ணுக்கு தெரியலையே...

ஒவ்வொரு முறையும் விளக்கம் சொல்லி, சொல்லிகொடுத்த அக்காவிற்கு அதற்கு மேல் பொறுமை இல்லை. அன்றைய பாடம் அத்தோடு முடிந்தது. எங்கள் குட்டி தேவதை எப்போதும் அக்காவிடம் பாடம் படிக்கும் போது இப்படி தான் எதையாவது கேட்பாள் அல்லது அடம் பிடிப்பாள். இப்போது பேபி School க்கு(Pre K.G) போயி நிறைய Tamil/English பாட்டு கத்துகிட்டு எங்களுக்கு போன்ல பாடி காட்டுறா.

வருங்கால IAS / IPS / Doctor ஒருத்தங்க எங்க வீட்டுளும் இருக்காங்கப்பா.

11 கருத்துகள்:

  1. //வருங்கால IAS / IPS / Doctor ஒருத்தங்க எங்க வீட்டுளும் இருக்காங்கப்பா//

    karan thapppara kooda varalam

    பதிலளிநீக்கு
  2. குழந்தைகள் ரொம்ப புத்திசாலிங்க. ஒவ்வொரு வரியும் சிரிப்பா இருந்துச்சு.

    பதிலளிநீக்கு
  3. குழந்தைகள், நாம் எதிர்பாராத நேரத்தில் எதிர் கேள்வி கேட்டு நம்மை வியப்பில் ஆழ்த்தும் கண்மணிகள்!
    எனக்கு ஒரு அனுபவம். என்னுடைய அக்கா மகள் எங்கள் வீட்டில் தங்கி இருந்தபோது, அவளுக்கு ஆங்கிலத்தில் எங்களை எப்படி எழுதுவது என்று சொல்லிக் கொடுத்தேன். ஏற்கெனவே, அவளுக்கு fifty வரை எழுதத் தெரிந்ததால், sixty, seventy, முதலியவற்றை எழுதுவது எப்படி என்று சொன்னேன் "அது ஒண்ணுமில்லை, six, seven, eight, nine உனக்கு எழுதத் தெரியும் அல்லவா, அதற்கு பக்கத்தில் ty சேர்த்தால் போதும்" கேட்டுக்கொண்ட அவள், என்னிடம் எழுதிக் காட்டினால், இப்படி:
    sixty - 60
    seventy - 70
    eightty - 80
    ninety - 90
    tenty - 100

    பதிலளிநீக்கு
  4. எங்க ஒரு மாசமாஅ ஆளையே காணோம்!

    உங்களுக்கும் ஐ.ஏ.எஸ் தேர்வா!?

    பதிலளிநீக்கு
  5. Office + வீட்டுலேயும் கொஞ்சம் வொர்க் அதிகம். மேலும் படிப்புக்கும் டைம் ஸ்பென்ட் பண்ண வேண்டி இருப்பதால் கிடைக்கும் நேரத்தில் வலைத்தளத்தில் பதிவுகளை பார்த்துவிட்டு செல்லவே சரியாக இருக்கிறது. அதனால் தான் பின்னூட்டகள் சரியாக போட முடிவதில்லை.

    பதிலளிநீக்கு
  6. //சக்தி த வேல்..! சொன்னது…
    hi Eash i guess i know you..! do u know me?//

    sory. i cannot guess u. who r u?

    பதிலளிநீக்கு
  7. என்ன இப்பல்லாம் வலையில தலைய உடறதே இல்லயா? (அப்படியே உட்டா நம்ம பக்கமும் உடுங்க)

    பதிலளிநீக்கு