சனி, 14 ஆகஸ்ட், 2010

அத்தை மகனே போய் வரவா

அத்தை மகனே போய் வரவா
அம்மான் மகனே போய் வரவா
உந்தன் மனதை கொண்டு செல்லவா
எந்தன் நினைவை தந்து செல்லவா

மல்லிகை மலர் சூடி காத்து நிற்கவா
மாலை இளந்தென்றல் தன்னை தூது விடவா
நல்லதோர் நாள் பார்த்து சேதி சொல்லவா
நாட்டோரை சாட்சி வைத்து வந்து விடவா

பெண் பார்க்கும் மாப்பிள்ளை முகம் பார்க்கவா
முகம் பார்க்க முடியாமல் நிலம் பார்க்கவா
நிலம் பார்த்து மெதுவாக உன்னை நாடவா
உனை நாடி உனை நாடி
உனை நாடி உனை நாடி உறவாடவா

அத்தை மகனே போய் வரவா
உந்தன் மனதை கொண்டு செல்லவா
எந்தன் நினைவை தந்து செல்லவா

14 கருத்துகள்:

  1. நல்ல பாட்டு. ஆனால் இப்பொழுது எதற்கு ??

    பதிலளிநீக்கு
  2. //பெண் பார்க்கும் மாப்பிள்ளை முகம் பார்க்கவா
    முகம் பார்க்க முடியாமல் நிலம் பார்க்கவா
    நிலம் பார்த்து மெதுவாக உன்னை நாடவா
    உனை நாடி உனை நாடி
    உனை நாடி உனை நாடி உறவாடவா//
    இது வெள்ளிகிழமை என்னை பெண் பார்க்க வரும் அத்தை பையனுக்காக

    பதிலளிநீக்கு
  3. //இது வெள்ளிகிழமை என்னை பெண் பார்க்க வரும் அத்தை பையனுக்காக//

    என் ஆழ்ந்த அனுதாபங்கள். உங்க அத்தை பையனுக்கு

    பதிலளிநீக்கு
  4. //என் ஆழ்ந்த அனுதாபங்கள். உங்க அத்தை பையனுக்கு//

    Thanks

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துகள், கூடிய விரைவில் திருமண நாளை அறிவிக்கவும், ஆனா போய் வரவான்னு இருக்கு ?

    பதிலளிநீக்கு
  6. அத்தை மகன் என்ன சொன்னார். என்னைக்கு கல்யானம் சீக்கிரம் சொல்லுங்க

    பதிலளிநீக்கு
  7. 10.09.2010 செல்வி திருமதி ஆக போறா

    பதிலளிநீக்கு
  8. வருக திருமதியே, திருவும் மதியும் சேர செம்மையாய் வாழ்க்கை தொடரட்டும், வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  9. //10.09.2010 செல்வி திருமதி ஆக போறா

    //

    எப்ப டிரீட் தர போறீங்க

    பதிலளிநீக்கு
  10. திருமண வாழ்த்துக்கள். அடுத்த பதிவு போடுவீங்க தானே.

    பதிலளிநீக்கு
  11. அடுத்த பதிவு எங்க ஈஸ்வரி

    பதிலளிநீக்கு
  12. ஆஹா...

    கொஞ்ச நாள் வராததால தெரியாம போயிடுத்து....

    என் மனம் கனிந்த வாழ்த்துக்கள் ஈஸ்வரி....

    பதிலளிநீக்கு
  13. பதிவுலகம் உங்களை மறந்துடப்போவுது. சீக்கிரம் வாங்க

    பதிலளிநீக்கு