வியாழன், 13 ஆகஸ்ட், 2009

எதற்கு இந்த தலைப்புக்கள்?

தேர்தல் சமயத்தில் அரசியல்வாதிகள் ஓட்டு வாங்க இல்லாத சேட்டை செய்வார்கள். இந்த பதிவுலகத்திற்கு திடீரென்று என்ன வந்துவிட்டது? ஆளாளுக்கு ஆன்மிகம், சமயம்,சம்பிரதாயம், கடவுள் என்ற ஒரு உணர்வு பூரணமான தலைப்பை எடுத்துக்கொண்டு விவாதிக்கிறார்கள்?

ஆன்மீகத்தில் இருப்பவர்கள் தங்கள் வாழ்வில் பல அற்புத அனுபவங்களை உணர்ந்து இருப்பார்கள். ஆதலால்தான் கடவுள் இல்லை என்றும், அவரை கேலியாக பேச ஆரம்பித்தால் எங்களால் தாங்க முடியாமல் துள்ளி குதித்து பேச ஆரம்பிப்போம்.

ஆன்மீகவாதிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கடவுளை வாங்குவர், சிவன், சக்தி, பெருமாள், பிள்ளையார், முருகர், etc

நான் சிவ பெருமானை முழுதாக நம்புபவள். ஈசனை வணங்குவோர்க்கு கிடைக்கும் ஒரு அற்புத சக்தி உள்ளுணர்வு அதாவது ஒரு செயல் நடப்பதற்கு முன்னரே இது சரியாக நடக்கும், இது தவறாக நடக்கும் என்றும், ஏதோ ஒரு நல்லது /கெட்டது நடந்துள்ளது, நடக்க இருக்கிறது என்பது மனது கூறும். இதனை உள்ளுணர்வு / Intuition என்பர்.

பொதுவாக யோகா செய்பவர்க்கும், எதையும் ஆழ்ந்து தெளிவாக நடைமுறைக்கு ஏற்ப முடிவெடுப்பவருக்கும் இந்த உள்ளுணர்வு ஓரளவு இருக்கும். ஆனால் சிவ பெருமானை வணங்கும் பெரும்பாலனவர்க்கு இந்த அபூர்வ உள்ளுணர்வு எளிதாக கிடைக்கிறது.
நடக்கும் நடக்காது என்பதை ஓரளவு எங்களுக்கு முன்னரே தெரிந்து விடுவதால் முடிவுகள் எப்படி இருந்தாலும், அல்லது எது எப்படி நடந்தாலும் தைரியத்துடன் எதிர்கொள்ள முடிகிறது.
மேலும் அதனை நல்ல முறையில் பயன்படுத்தும் வரை உள்ளுணர்வு நம்மிடமே இருக்கும்

என் தோழி மகேஸ்வரி. அவர் சிவ பெருமான் மீது அதீத பக்தியோடு இருப்பவள். அவள் வசிப்பது ஒரு பக்க பட்டிகாடு. அவள் அப்பா சிவன் கோவில் பூசாரி.
ஒருமுறை செமெஸ்டர் (Accountancy paper)எக்ஸாம் போது அவள் என்னிடம் Exam Hall போவதற்கு 15 நிமிடத்திற்கு முன் ஒரு 12 மார்க்ஸ் கேள்வியை காண்பித்து இதை படி என்றால். நானும் படித்தேன். அதிசயம் அந்த கேள்வி எக்ஸாம்ல் வந்து. அந்த பரிச்சையில் நா எடுத்த மதிப்பேன் 42! (pass marks is 40). அவளிடம் எப்படி உனக்கு இது தெரியும் என்றால் அவள் சொன்ன ஒரே பதில் உள்ளுணர்வு. Avarage மாணவியாக இருந்தவள் இன்று CA முடித்து ஆடிடோர்-ஆக இருக்கிறாள். இதற்கு அவள் சொல்லுவது 'எல்லாம் அவன் செயல்'. இது போல என் வாழ்க்கையிலும் பல பல அனுபவங்கள் இருக்கு. ஒவ்வொரு ஆன்மீகவாதிகள் வாழ்க்கையிலும் பல பல அதிசயங்கள் நடந்து இருக்கு.

இந்த உணர்வில் லயித்தவர்கள் சிலர் வெளியில் வர விருப்பம் இல்லாமல் அந்த அதிசயத்தில் கலந்து விடுவர். அதாவது சிவ சித்தராகி விடுவர். (நாத்திகர் பாசையில் பைத்தியங்கள்)

ஆனால் இது எதுவுமே நடக்காத/உணராத நாத்திகவாதிகள் இறைவன் இல்லை. அவன் கல், காளான் என்று எல்லாம் பேசுகிறார்கள்!!!!! ??????

நாத்திகவாதிகளுக்கு கடவுள் இல்லை என்று சொல்வதிலும், எங்களுடன் விவாதம் என்ற பெயரில் எல்லாம் தெரிந்தவர்கள் போல பேசுவதிலும் ஒரு சந்தோசம்.

மேலும் வால் பையனின் விவாதத்தில் கலந்து கொண்டதிலிருந்து நா தெரிந்து கொண்டவை,

1. இறை உணர்வை உணர்ந்து கொள்ளும் பக்குவம் இன்னும் இவர்களுக்கு வரவில்லை. (அப்படி விளக்க போனால் அது விவாதமாகி எனது அன்றைய நாள் வேலைகளும், படிப்பும் கேட்டு போகிறது)

2. அப்படியென்றால் கடவுள், ஆன்மீக போன்றவற்றை எப்படி இவர்களுக்கு தெரியவைப்பது என்றால்

ஒவ்வொருவரும் ஒவ்வொரு சூழ்நிலையில்தான் கடவுளை உணர்ந்து இருக்கிறார்கள். இவர்களுக்கும் அது போல சூழ்நிலை வரும். அப்போது அவர்களே அதை தெரிந்து கொள்வர்.
அதுவரை அவர்களை பொறுத்தவரை நான் (ஆன்மீகவாதி) பைத்தியமாகவே இருந்துவிட்டு போறேன்.

என் பதிவுலக நண்பர்களே இனி யாரும் என்னை ஆன்மிகம் சார்ந்த விவாதத்திருக்கு அழைக்க வேண்டாம்.

12 கருத்துகள்:

  1. //ஆளாளுக்கு ஆன்மிகம், சமயம்,சம்பிரதாயம், கடவுள் என்ற ஒரு உணர்வு பூரணமான தலைப்பை எடுத்துக்கொண்டு விவாதிக்கிறார்கள்? //

    நல்லதுதானே ஈஸ்வரி... இங்கேயாவது இருக்கட்டுமே.... வெளிலதான் கருப்பு சட்டைகளின் தொல்லை.... இங்கேயும் கூட நிறைய‌ க‌ட‌ப்பாரைக‌ள் இருக்கே....

    //ஆதலால்தான் கடவுள் இல்லை என்றும், அவரை கேலியாக பேச ஆரம்பித்தால் எங்களால் தாங்க முடியாமல் துள்ளி குதித்து பேச ஆரம்பிப்போம். //

    உண்மை..... எவ்வ‌ள‌வு நாட்க‌ள், வ‌ருட‌ங்க‌ள் கடவுளை தேடிவிட்டு இல்லை
    என்கிறார்க‌ள் இவ‌ர்க‌ள்?

    //இதனை உள்ளுணர்வு / Intuition என்பர்.//

    இது அமைய‌ப்பெற்றால் வ‌ர‌ம்....

    //சிவ பெருமானை வணங்கும் பெரும்பாலனவர்க்கு இந்த அபூர்வ உள்ளுணர்வு எளிதாக கிடைக்கிறது. //

    என‌க்கும் பெரும்பாலான‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் இது போன்று தோன்றியிருக்கிற‌து...

    //ஒவ்வொரு ஆன்மீகவாதிகள் வாழ்க்கையிலும் பல பல அதிசயங்கள் நடந்து இருக்கு.//

    மிக‌ ச‌ரி ஈஸ்வ‌ரி....

    //அதாவது சிவ சித்தராகி விடுவர். (நாத்திகர் பாசையில் பைத்தியங்கள்).//

    திருவ‌ண்ணாம‌லையில் இப்ப‌டி நிறைய‌ பேர் பார்க்க‌லாம்....இவ‌ர்க‌ளை துன்புறுத்தாம‌ல் இருப்ப‌து அனைவ‌ருக்கும் ந‌ல்ல‌து...

    //மேலும் வால் பையனின் விவாதத்தில் கலந்து கொண்டதிலிருந்து //

    அந்த‌ விவாத‌த்தில் நானும் ஒரு துளி ஈஸ்வ‌ரி.... இதோ நான் அங்கு இட்ட‌ க‌மெண்ட்.

    ( R.Gopi said...
    300௦௦ அடிச்சுட்டு ஆடாம ஸ்ட்ராங்காக நிற்கும் வால்பையன் அவர்களே.... வணக்கம... வாழ்த்துக்கள்......

    ஏன், மறுபடியும், இப்படி கடவுள் இருக்கிறாரா என்ற தேடல்.....

    கடவுள் இருக்கிறார் என்று சொல்பவர்கள், தங்களின் அந்த "இறை" நம்பிக்கையில் "கடவுள்"ஐ தேடுபவர்கள்....

    கடவுள் இல்லை என்று சொல்பவர்கள், தேடாமலேயே சொல்கிறார்களோ என்று நினைக்கிறேன்....

    நீங்கள் கடவுளை எவ்வளவு வருடம் தேடிவிட்டு கடவுள் இல்லை என்று சொல்கிறீர்கள்......?)

    //ஒவ்வொருவரும் ஒவ்வொரு சூழ்நிலையில்தான் கடவுளை உணர்ந்து இருக்கிறார்கள். இவர்களுக்கும் அது போல சூழ்நிலை வரும். அப்போது அவர்களே அதை தெரிந்து கொள்வர்.//

    ந‌ம் அனுப‌வ‌த்தை வார்த்தைக‌ளில் எவ்வளவுதான் விள‌க்கினாலும், அந்த‌ அனுப‌வ‌த்தின் முழு சுவையையும், அவ‌ர்க‌ளே அனுப‌வித்தால‌ன்றி அவ‌ர்க‌ளுக்கு தெரியாது, ச‌ரியா?

    //அதுவரை அவர்களை பொறுத்தவரை நான் (ஆன்மீகவாதி) பைத்தியமாகவே இருந்துவிட்டு போறேன். //

    இவ்வ‌ள‌வு விர‌க்தியான‌ ப‌தில் வேண்டாமே ஈஸ்வ‌ரி.... கொஞ்ச‌ம் சாந்தி அடையுங்க‌ள்...
    இந்த‌ உல‌க‌த்தில் இதுபோல் எவ்வ‌ள‌வோ பேர் இருக்கிறார்க‌ள்... அவ‌ர்க‌ளை போன்ற‌ ஆட்க‌ளை குறிவைத்தே அர‌சிய‌ல்வாதிக‌ளும் ந‌டைபோடுகிறார்க‌ள்.... விடுங்க‌ள்...

    தாங்க‌ள் அமைதியாயிருக்க‌ வேண்டிய‌ த‌ருண‌மிது.... அமைதியாக‌ இருங்க‌ள்...

    பதிலளிநீக்கு
  2. நான் பதிவுலகில் வந்ததிலிருந்து கடவுள் மறுப்பு கொள்கையை எழுதி கொண்டிருக்கிறேன்!
    புதிதாக விளம்பரம் தேட ஆயிரத்தெட்டு வழிகள் இருக்கிறது!

    உங்களை தொந்தரவு செய்ய வேண்டும் என்ற எண்னம் எனக்கில்லை!
    எபோதும் போல் நல்ல நண்பர்களாக இருப்போம்!

    கருத்து வேறு நட்பு வேறு!

    பதிலளிநீக்கு
  3. அன்புள்ள ஈஸ்வரி அவர்களுக்கு,
    தங்களுக்கு நம்பிக்கை ஊட்டக்கூடிய வகையில் தாயுமானவர் செயல்படுவாரானால் மிக்க நல்லது.
    8ஆம் அதிபதி லக்னத்திலிருந்தால் தெய்வ நம்பிக்கைகள் இருக்காது என்கிற அமைப்பும் உண்மையில் சர்வேஸ்வரனால் எற்படுத்தப்பட்டதாகவே இருந்தால் நான் என்னதான் செய்ய முடியும்?
    நானும் தினமும் _நடந்தது என்ன_விஜய் டிவி நிகழ்ச்சியை இண்டேர்நேட்லே பார்த்து நம்மூர் ESP ஆளுங்களையும் பார்த்துக்கிட்டுதாநிருக்கிறேன்.நீங்க உங்க தோழி சொல்லி 42மார்க் வாங்க காரணமா இருந்த அதே ESP டச். அது கூட தனிமனிதனின் ஒரு தனித்தன்மையாத்தான் நான் பாக்குறேன்..
    எப்பிடியோ நல்ல dreams நடக்க யாரு எந்த ரூபத்துலே காரணமா இருந்தாலும்
    என் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. //ந‌ம் அனுப‌வ‌த்தை வார்த்தைக‌ளில் எவ்வளவுதான் விள‌க்கினாலும், அந்த‌ அனுப‌வ‌த்தின் முழு சுவையையும், அவ‌ர்க‌ளே அனுப‌வித்தால‌ன்றி அவ‌ர்க‌ளுக்கு தெரியாது, ச‌ரியா?//
    உண்மை கோபி. அதனால் தான் இவர்களிடம் விவாதிப்பது வீண் என்று ஒதுங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  5. //8ஆம் அதிபதி லக்னத்திலிருந்தால் தெய்வ நம்பிக்கைகள் இருக்காது என்கிற அமைப்பும் உண்மையில் சர்வேஸ்வரனால் எற்படுத்தப்பட்டதாகவே இருந்தால் நான் என்னதான் செய்ய முடியும்?//

    இதுவும் உண்மையாக இருக்கலாம். எல்லாம் அவன் செயல். இதில் யாரையும் குறை கூற நமக்கு உரிமை இல்லை. உங்கள் வருக்கைக்கும் பதிவிற்கும் நன்றி minorwall.

    பதிலளிநீக்கு
  6. நல்ல பதிவு .வாழ்த்துகள்.follower என்கிற option இல்லையே உங்கள் வலைப் பக்கத்தில்?
    தயவு செய்து word verification ஐ எடுத்து விடுங்கள்.

    பதிலளிநீக்கு
  7. //கடவுள் இல்லை என்று சொல்பவர்கள், தேடாமலேயே சொல்கிறார்களோ என்று நினைக்கிறேன்....

    நீங்கள் கடவுளை எவ்வளவு வருடம் தேடிவிட்டு கடவுள் இல்லை என்று சொல்கிறீர்கள்......?)//

    நான் சென்ற வருடம் இந்தியாக்கு வந்தபோதுகூட எங்கள் குலதெய்வத்துக்கு கடாவெட்டி பூசை போட்டோம்.ஆஞ்சநேயரை சுசீந்திரத்திலே போய் பார்த்து வந்தேன்.
    இந்தமுறை வந்திருந்தபோது வைஷ்ணவிதேவிகோவில்,ஆஞ்சநேயர்,
    சத்யநாராயணர் என்று லிஸ்ட் நீண்டதே தவிர பலன் ஒன்றும் இல்லை.(உடனே பலனை எதிர்பார்த்து கடவுளை வேண்டாதீர்கள் என்று வியாக்கியானம் வேண்டாம்.நான் ஒன்றும் துறவியல்ல.)நானே நம்பாமல் என் நம்பிக்கையை மட்டுமே கைகொள்பவனாக இருந்தாலும் என் குடும்பத்தாரின் நம்பிக்கையும் தீவிர விரதங்களும்,வாராவாரம் அனுஷ்டிக்கும் சில பூஜைகளும் என்று நான் தலையிடாத விஷயங்களுக்கு என்று அவர்களின் வேண்டுதளுக்காகவாவது அந்த கடவுள் இருந்தால் பலன் கிடைத்திருக்க வேண்டுமல்லவா?
    உங்களுக்கெல்லாம் இன்னும் தனியாக குடும்பம் என்று இருக்கிறதோ இல்லையோ எனக்கு தெரியாது.ஆனால் குடும்பம் என்று ஒன்று இருந்து சில முக்கிய குடும்பநல நிகழ்வுகள் நிகழாமல் போகுமாயின் அதற்கு பின் விளைவாக எந்தந்த ரூபத்தில் பிரச்சினைகள் பூதாகரமாக வெடிக்கும் என்கிற அளவுகளின் விசுவரூபத்தையும் உங்களுக்கு உங்கள் நிலையிலே (ஒருவேளை இன்னும் தனியாக குடும்பம் என்று ஒன்று இல்லாதபட்சத்தில்)இருந்து பார்க்கும் போது புரியாது.

    காரணகர்த்தாவாக காரகனையும், அதிபதியையும்,இன்னபிற இத்யாதி இத்யாதிகளையும் அலசிக்காயப்போட்டாலும் எது நடக்குமோ அதுதான் நடக்கும் என்கிற நிலையிலே எல்லாவற்றுக்கும் மேலான சக்தி????
    நடத்திவைக்குமானால், அந்த சக்தி (ஒரு வாதத்துக்காக இருப்பதாகவே ஒப்புக்கொண்டாலும்)நல்ல விளைவுகளை நடத்தி வைக்கத் தவறுமானால் அப்பிடி ஒரு சக்தியே இல்லை என்று தூக்கி எறிந்துவிட்டு சுயநம்பிக்கையை தளரவிடாமல் கொண்டுபோகும் தனிமனிதனின் சிறந்த முன்னுதாரணப்போக்குக்கு தலைவணங்க வேண்டியதுதான் மனிதகுல முயற்சிக்கெல்லாம் நாம் கொடுக்கும்
    கவுரவம் ஆகும்.

    Eg. Edison went through 25,000 different methods to make a battery, before he finally developed one that worked. Shortly afterwards he was asked, 'how do you feel, having failed 25,ooo times'. Edison replied 'I know 25,000 ways how not to make a battery, how about you?!'

    தோமஸ் ஆல்வா எடிசன் இல்லீனா இன்னிக்கு உலகமே இல்லை.

    அதைத்தான் தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன மெய்வருத்தக் கூலி தரும்
    என்று சொன்னார் நம்ம வள்ளுவர்..

    சோ..அவர் (கடவுள்)கடமையை அவரு சரியா செய்யலேன்னா அவரையே தூக்கி ஏறிய வேண்டியது நம்ம கடமையாகிறது..

    பதிலளிநீக்கு
  8. //follower என்கிற option இல்லையே உங்கள் வலைப் பக்கத்தில்?//
    நா blog எழுத ஆரம்பிக்கும் போது நன்றாக எழுதுவேன் என்று நினைக்கவில்லை. இப்போதும் நன்றாக எழுதுவதாக தோன்றவில்லை. ஆதலால் தான் follower option வைக்கவில்லை. உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திருக்கும் நன்றி ஸ்ரீ

    பதிலளிநீக்கு
  9. ஸ்ரீ

    ப்லோயர் ஆப்சன் வைக்காட்டியும் நம்மால் பாலோயர் ஆகமுடியும்!
    பின்னாடியே போறதான்னு கேக்காதிங்க!

    உங்க டாஷ்போர்டுல who i am following னு ஒரு ஆப்ஷன் இருக்கும், அதற்கு கீழே add ன்னு இருக்கும், இவுங்களோட URL ல்லை காப்பி செய்து, அதில் போட்டுடுங்க! இவுங்களுக்கு தெரியாமலேயே நீங்க பாலோயர் ஆகிடலாம்!

    பதிலளிநீக்கு
  10. ஈஸ்வரி, நல்ல முடிவு எடுத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள். அது நேரத்தை விரயமாக்கும் வேலை தான்.

    பதிலளிநீக்கு
  11. ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நமூ நாராயணாய

    பதிலளிநீக்கு
  12. ஓம் நமசிவாயா.

    வரவிற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி புலிகேசி

    பதிலளிநீக்கு